தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் – பிரதமர் மோடி ட்வீட்..!

தெலுங்கானா மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, மஜ்லீஸ் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன.

தெலுங்கானாவில் மொத்தம் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிகின்றனர். மாநிலத்தில் மொத்தம் 35,655 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!

7571 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குசாவடிகளாக காணப்படுவதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 50,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 375 கம்பெனி ராணுவ வீர்ரகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் 2.5 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு . மற்ற பகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘தெலுங்கானாவில் உள்ள எனது சகோதர, சகோதரிகள் சாதனை எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள், குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.