பேருந்திலிருந்து மூதாட்டியை இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் …!

பேருந்திலிருந்து மூதாட்டியை இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளைச்சலில் மீன் விற்பனை செய்து வரக்கூடிய செல்வம் எனும் மூதாட்டி மீன் விற்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக வானியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்து நடத்துனர் அவரை கீழே இறங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மூதாட்டி அந்த பேருந்து நிலையத்தில் நின்று அழுது கூச்சலிட்டுள்ளார். தான் நடந்து சென்று வீட்டை … Read more

எச்சில் தொட்டு பயண சீட்டு கொடுத்த நடத்துனர்….! அதிரடியாக கொரோனா பரிசோதனை செய்த அதிகாரிகள்…!

எச்சில் தொட்டு பயண சீட்டு கொடுத்த நடத்துனருக்கு கொரோனா பரிசோதனை. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கைக்கொள்ள வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை கோவையில் இருந்து திருப்பூருக்கு வந்த அரசுப் பேருந்து ஒன்றில் நடத்துனர் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் போது எச்சில் தொட்டு வழங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி … Read more

காலையிலேயே குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்கிறாயா….? முதியவரை தாக்கிய நடத்துனர்…!

பேருந்தில் பயணித்த முதியவரை தாக்கிய நடத்துனர்.  ஈரோடு அருகே சத்தியமங்கலத்திலிருந்து கவுந்தம்பாடி வழியாக ஈரோடு நோக்கி  அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பயணிகளுக்கு நடத்துனர் டிக்கெட் வழங்கி வந்த நிலையில், பேருந்தில் பயணித்த முதியவரிடம் நடத்துனர் டிக்கெட்டுக்கு சில்லறை கேட்டுள்ளார். இதில் நடத்துனர் மற்றும் முதியவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது நடத்துனர் ஆத்திரத்தில் காலையிலேயே குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்கிறாயா? என்று தகாத வார்த்தைகளினால் முதியவரை திட்டியுள்ளார். இதனையடுத்து முதியவர் தான் … Read more

டிரைவர் போட்ட பிரேக்கால் கண்ணாடியை உடைத்துக் கொண்டு சாலையில் விழுந்த கண்டக்டர்!

சென்னை ஆவடி அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது, பேருந்தின் குறுக்கே குழந்தை ஒன்று திடீரென ஓடியதால், ஓட்டுநர் உடனடியாக பிரேக் பிடித்துள்ளார். அப்போது பயணிகளுக்கு பயணசீட்டு கொடுத்துக் கொண்டிருந்த நடத்துனர் ஆறுமுகம் நிலைதடுமாறி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு சாலையில் விழுந்துள்ளார். இவர் தவறி விழுந்ததில், ஆறுமுகம் மீது கண்ணாடி துகள்கள் குத்தியதால் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து, இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடிவேல் பட … Read more

இன்று நடத்துநர்.! நாளைய கலெக்டர்.? நிறைவேறுமா வாலிபரின் கனவு.?

கர்நாடக மாநில அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றி வரும் 29 வயதுடைய மது என்பவர், தனது பணி நேரம் போக தினமும் 5 மணி நேரம் போட்டித்தேர்வுக்காக படித்து வந்துள்ளார். யூபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்த இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல்நிலை மற்றும் முதன்மை தேர்விலும் வெற்றிப் பெற்றுள்ளார். வரும் மார்ச் மாதம் நேர்காணல் தேர்வு நடக்கவுள்ளது. இதில் தேர்ச்சிப் பெற்றால், நடத்துநர் பணியிலிருந்து ஐஏஎஸ் அதிகாரியாக மாறிவிடுவார். கர்நாடக மாநில அரசு … Read more

பயணியின் தங்க தாலிக்கொடியை ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநர்.!குவிக்கும் பாராட்டுக்கள் .!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள  கெட்டவாடி என்ற கிராமத்திற்கு அரசு பேருந்தில் பயணம் செய்த துண்டம்மா என்ற பெண் தனது தங்கச்சங்கிலியை தவறவிட்டார். பின்னர் துண்டம்மா  தவறவிட்ட தங்கச்சங்கிலியை அவரிடமே ஒப்படைத்தனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி பேருந்து நிலையத்தில் இருந்து கெட்டவாடி என்ற கிராமத்திற்கு அரசு பேருந்து சென்றது. கெட்டவாடியில்  இருந்து பேருந்து திரும்பிக்கொண்டிருந்த போது பேருந்தில் சில பயணிகள் மட்டுமே பயணம்செய்தனர். அப்போது பயணிகள் இருக்கையின் கீழ் தங்கச்சங்கிலி கிடைப்பதை நடத்துனர் மகேஷ் பார்த்துள்ளார். இதுபற்றி நடத்துனர் … Read more

இரவு நேரத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடத்து‌நர்..!

சென்னை சேர்ந்த  பெண் ஒருவர் கோயம்பேட்டில் இருந்து மன்னார்குடிக்கு இரவு பேருந்தில் சென்று உள்ளார். அப்போது அப்பெண் உறங்கி கொண்டிருந்தபோது நடத்துனர் ராஜீ  பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பெண் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். ஏற்கனவே ஓடும் பேருந்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடத்துனர் ராஜு மீது புகார்கள் எழுந்ததால் அவரை பணிஇடை நீக்கம் செய்யப்பட்டு  மீண்டும் பணியில் சேர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.