பேருந்திலிருந்து மூதாட்டியை இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் …!

fish woman

பேருந்திலிருந்து மூதாட்டியை இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளைச்சலில் மீன் விற்பனை செய்து வரக்கூடிய செல்வம் எனும் மூதாட்டி மீன் விற்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக வானியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்து நடத்துனர் அவரை கீழே இறங்கி விட்டதாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த மூதாட்டி அந்த பேருந்து நிலையத்தில் நின்று அழுது கூச்சலிட்டுள்ளார். தான் நடந்து சென்று வீட்டை அடைந்ததாக கலக்கத்துடன் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரின் கண்டனத்தை பெற்ற நிலையில், முதல்வரும் இதற்கு கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து துறை துணை இயக்குனர் ஜெரோலின் அவர்கள் மூதாட்டி செல்வத்தை அவர் மீன் விற்பனை செய்யும் இடத்திற்கே நேரில் சென்று பார்த்து நடைபெற்ற சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், மூதாட்டியை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட ஓட்டுநர் மைக்கல், நடத்துனர் மணிகண்டன் மற்றும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நேரக் காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துத் துறை பொது மேலாளர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பான பதிவை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,