காலையிலேயே குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்கிறாயா….? முதியவரை தாக்கிய நடத்துனர்…!

பேருந்தில் பயணித்த முதியவரை தாக்கிய நடத்துனர். 

ஈரோடு அருகே சத்தியமங்கலத்திலிருந்து கவுந்தம்பாடி வழியாக ஈரோடு நோக்கி  அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பயணிகளுக்கு நடத்துனர் டிக்கெட் வழங்கி வந்த நிலையில், பேருந்தில் பயணித்த முதியவரிடம் நடத்துனர் டிக்கெட்டுக்கு சில்லறை கேட்டுள்ளார்.

இதில் நடத்துனர் மற்றும் முதியவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது நடத்துனர் ஆத்திரத்தில் காலையிலேயே குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்கிறாயா? என்று தகாத வார்த்தைகளினால் முதியவரை திட்டியுள்ளார். இதனையடுத்து முதியவர் தான் குடிக்கவில்லை என்று நடத்துனரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

நடத்துனர் மற்றும் முதியவரின் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. நடத்துனரின்  செயலை மற்ற பயணிகள் கண்டித்தனர். இது குறித்து நடத்துனர் கூறுகையில்  முதியவர் சைகையால் திட்டியதால் தான் முதியவரை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.  இதனை சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில்  வெளியிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு, நடத்துநர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.