#Breaking : புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கு உள்ள நிலவரத்தின்படி மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் … Read more

#BREAKING: இந்த 3 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய  மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள்  அறிவித்துள்ளனர்.

CAT 2021: தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

CAT 2021 தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் கீழ் காணும் முறைகளை பின்பற்றி விண்ணப்பியுங்கள். CAT 2021 பொது நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு செயல்முறை இன்றுடன்(செப்டம்பர் 15) முடிவடைகிறது. CAT 2021 க்கான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்யாத அனைத்து விண்ணப்பதாரர்களும் iimcat.ac.in. இந்த அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். அகமதாபாத்தின் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) நவம்பர் 28 ஆம் தேதி கேட் 2021 தேர்வை நடத்தும். இந்த தேர்வு 158 நகரங்களில் … Read more

கேரளாவில் அக்டோபர் 4 முதல் கல்லூரிகள் திறப்பு..!

கேரள மாநிலத்தில் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம்  வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது அங்கு நிபா வைரஸ் தொற்றும் பரவியுள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் கல்லூரிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மாநில உயர்கல்வித்துறை மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஆர்.பிந்து, மாநிலத்தில் கல்லூரிகளை வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

#BREAKING: தெலுங்கானாவில் நாளை பள்ளிகளை திறக்க தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

தெலுங்கானாவில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்து. தெலுங்கானாவில் நாளை முதல் 8, 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தெலுங்கானாவில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, பள்ளிகளை இப்போதைக்குத் திறக்க வேண்டாம் … Read more

இன்று முதல்அரசு கலைக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்..!

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு இன்று  முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு இன்று  முதல் செப்.1ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.58 மற்றும் பதிவு கட்டணம் ரூ.2 செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை செப்டம்பர் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. … Read more

புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகள் திறப்பு இல்லை” – புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் ..!

புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகள் திறப்பு தற்போது இல்லை என்று புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி, மதுபானக் கூடங்கள், கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என்றும் தனியார் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்குவதற்கும் அனுமதி வழக்கப்பட்டுள்ளது.மேலும்,திருமண நிகழ்ச்சிகளில் 100 பேரும், இறப்பு மற்றும் இறுதி சங்கு … Read more

காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் வெளியானதை தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தயாராகி வருகின்றனர். மேலும் இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஜூலை 26 ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என்று அறிவித்திருந்தார். இருந்தபோதிலும் சில பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை முன்பிலிருந்தே நடைபெற்று வருகிறது. அதேபோன்று மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை கடந்த சில … Read more

தமிழகத்தில் திட்டமிட்டபடி ஆகஸ்ட்-1ம் தேதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் – அமைச்சர் பொன்முடி

தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் … Read more

#Breaking:பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை -அரசானை வெளியீடு..!

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது 9 ஆம் வகுப்பில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் என்று தமிழக அரசு இன்று அரசானை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது ரத்து செய்யப்பட்டது.இதனால்,பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெறும் என குழப்பம் நிலவியது. இதனையடுத்து,தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 9 ஆம் வகுப்பில் … Read more