கல்லூரிகளில் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு பிறகே மாணவர்கள் சேர்க்கை தொடங்க வேண்டும்-அமைச்சர் பொன்முடி..!

தமிழக கல்லூரிகளில் ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதிக்கு பிறகே மாணவர்களின் சேர்க்கை தொடங்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இன்று காலை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து கலந்தாலோசித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இது போன்று நடக்கக்கூடாது என கூறினார். தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் … Read more

#Breaking:பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி..!

தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தளர்வுகளின்படி,பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஜூன் 14 ஆம் தேதி வரை அறிவித்துள்ள ஊரடங்கை நோய் தொற்று பரவாமல் தடுக்கவும், மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களை காக்கும் எண்ணத்திலும் மேலும் நீட்டித்து ஜூன் 21 ஆம் தேதி வரை செயல்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். … Read more

#Breaking: பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை.. தமிழக அரசு!

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதையடுத்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து தற்பொழுது கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், நாள் ஒன்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ கடந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியான நிலையில், கல்லூரிகளில் நடைபெறும் … Read more

கொரோனா பரவல்.., கல்லூரிக்கு விடுமுறை..!

கும்பகோணத்தில் கொரோனா காரணமாக ஆசிரியர் பயிற்சி கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்தநிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 3-நாட்களாக கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டி வருகிறது. அதிலும், குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்தும், பல பள்ளி மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் 9,10,11 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. … Read more

தமிழகத்தில் பள்ளிகளைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை.?

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து நாள் ஒன்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ கடந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று அதிகரிப்பால் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கல்லூரிகளுக்கும் … Read more

இன்று முதல் கல்லூரிகளும் திறக்கப்படும்.. அரசு அதிரடி.!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகளும் திறக்கப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்லூரிகள் இன்று திறப்பதால் மத்திய சுகாதார அமைச்சகத்தின் படி கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தபட்டுள்ளது.தமிழகத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டது என்பது … Read more

இன்று முதல் கல்லூரிகள் திறப்பு.. தமிழக அரசு அனுமதி.!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.மேலும், ஒரே இடங்களில் கூடவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், கோவில்கள், வணிக வளாகங்கள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் கல்வி கூடங்கள் ஆகியவை மூடப்பட்டது. பின்னர், படிப்படியாக கோவில்கள், வணிக வளாகங்கள் போன்றவை திறக்க அரசு அனுமதி வழங்கியது.  இதைத்தொடர்ந்து, தற்போது கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று முதல் தமிழகத்தில் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கவுள்ளது. மொத்த மாணவ மாணவியரில் 50% மட்டுமே வளாகத்தினுள் அனுமதிக்கப்பட வேண்டும், … Read more

குஜராத்தில் பள்ளிகள், கல்லூரிகள் நவம்பர் 23 முதல் மீண்டும் திறப்பு.!

குஜராத் மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வருகின்ற நவம்பர் 23 முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனா வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து குஜராத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் நவம்பர் 23 முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.இருந்தாலும், தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், அதற்கான முடிவை நேற்று அறிவிப்பது குறித்து கருத்துக்களை கேட்ட பின்னர் முடிவு செய்வதாக அம்மாநில அரசு கூறியது. இது குறித்து, கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமா கூறியதாவது,”குஜராத் முதல்வர் விஜய் … Read more

முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் 23 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் – அண்ணா பல்கலைக்கழகம்!

முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு வரும் 23 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நோய்க்கட்டுப்பாடு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் வரும் 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பள்ளி, கல்லூரிகள் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் திறக்கும் முயற்சியில் தீவிரமடைந்துள்ளது. இந்தநிலையில், பொறியியல் … Read more

பல்கலைக்கழகங்கள் திறப்பு குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு….

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்தும், இந்த கல்வி ஆண்டில் முதலாண்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டிய கால அட்டவணையையும் பல்கலைக்கழக மானியக் குழுவான யூஜிசி தற்போது  வெளியிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்குவதால்  முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நாட்காட்டி கீழ்கண்டபடி நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.  முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அக்டோபர் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.  முதலாம் ஆண்டு அல்லது முதல் பருவத்துக்கான வகுப்புகள் … Read more