புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகள் திறப்பு இல்லை” – புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் ..!

புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகள் திறப்பு தற்போது இல்லை என்று புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி, மதுபானக் கூடங்கள், கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என்றும் தனியார் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்குவதற்கும் அனுமதி வழக்கப்பட்டுள்ளது.மேலும்,திருமண நிகழ்ச்சிகளில் 100 பேரும், இறப்பு மற்றும் இறுதி சங்கு போன்ற துக்க நிகழ்ச்சிகளில் 20 பேரும் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடா்பாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில்,கல்வித்துறை, சுகாதாரத்துறை செயலாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனையடுத்து,செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்:”கொரோனா 3 வது அலை எப்போது தாக்கும் என்பது தெரியவில்லை.மேலும்,இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.எனவே தற்போதைய நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது சாத்தியமில்லை.மேலும்,இதுகுறித்து ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் ஆலோசிக்கப்படும்.அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.