இன்றிரவு சனிக்கோள் பூமிக்கு அருகில் வருகிறது…!

இன்றிரவு சனிக்கோள் பூமிக்கு அருகில் வரவுள்ளது, நாடு முழுவதுமுள்ள மக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் இதனை காணலாம்.

சூரிய குடும்பத்தின் 8 கோள்களில் ஒன்றான சனிக்கோள் இன்று பூமிக்கு மிக அருகில் வர உள்ளது. எனவே இன்றிரவு சனிக்கோளை நாம் காண முடியும் என வானியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும், இன்று காலை 11:30 மணி முதலே சனிக்கோள் பூமிக்கு மிக நெருக்கமாக இருக்கும் என ஒடிசாவின் பதானி சமந்தா கோளரங்க துணை இயக்குனர் சுவேந்து பட்நாயக் அவர்கள் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இன்றிரவு பொதுமக்கள் சனிக்கோளை எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்க முடியும்.

ஆனால், இந்த சனிக்கோளை சாதாரண கண்களால் பார்க்கும் பொழுது வெறும் விண்மீன் போல மட்டுமே தெரியுமாம், இருப்பினும் விண்மீன் போல விட்டு விட்டு ஒளிராமல், தொடர்ச்சியாக ஒளிருமாம், இதை வைத்து இது தான் சனிக்கோள் என அடையாளம் காணமுடியும் என வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சாதாரணமாக பைனாகுலர் மூலம் பார்த்தால் சனிக்கோளின் வளையத்தைக் காணமுடியும் என கூறுகின்றனர். நவீன தொலைநோக்கி மூலமாக பார்க்கும் போது சனி கோளுக்கும் வளையத்திற்கும் இடையே உள்ள இடைவெளி கூட நன்றாக தெரியும் எனக் கூறப்படுகிறது.

author avatar
Rebekal