சீனாவில் எரிவாயு பைப் வெடித்து 12 பேர் உயிரிழப்பு..!

சீனாவில் எரிவாயு பைப் வெடித்து சிதறியதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  சீனா ஹூபேய் மாகாணத்தில் அமைந்துள்ள ஷியான் நகரில் குடியிருப்பு பகுதியில் எரிவாயு பைப் ஒன்று வெடித்து சிதறிய சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உணவுப்பொருள் மார்க்கெட் பகுதியின் ஒரு பாகம் இடிந்து விழுந்ததில் அங்கு வேலை செய்யும் கடைக்காரர்கள் மற்றும் உணவுப்பொருள் வாங்க வந்த பொது மக்கள் என பலரும் இடி பாடுகளில் சிக்கினர். மேலும், இதன் … Read more

வௌவால்களில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா…! ஆய்வில் வெளியான தகவல்…!

வௌவால்களிடம் ஆய்வு மேற்கொண்டதில் 24 வகையான கொரோன வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வைரஸ் பெருந்தொற்றுக்கு காரணமான SARS-COV-2வகையை ஓத்திருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் ஆனது சீனாவின் யுகான் மாகாணத்தில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. முதலில் அங்கு கண்டறியப்பட்ட நிலையில், இதனைத் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸின் பாதிப்பு பரவி வருகிறது. இந்த வைரஸ் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். சீனாவில் வௌவால் இனத்தில் புதுவகையான வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். … Read more

சீனாவில் ரசாயன நிறுவனத்தில் நச்சு வாயு வெளியேற்றம்…8 பேர் உயிரிழப்பு….

சீனாவில் உள்ள ரசாயன நிறுவனத்தில் நச்சு வாயுவை சுவாசித்ததில் 8 பேர் இறந்தனர், 3 பேர் நோய்வாய்ப்பட்டனர். தென் சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் நேற்று ரசாயன நிறுவனத்தில் நச்சு வாயு கசிந்ததையடுத்து, அதை சுவாசித்தவர்களில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் நோய்வாய்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாகாண தலைநகர் குயாங்கில் உள்ள காவல்துறையினருக்கு அதிகாலையில் ஒரு ரசாயன நிறுவனத்தின் அருகே சிலர் மயக்கத்தில் கிடந்ததாக தகவல் கிடைத்ததாக அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து … Read more

சீனாவுக்கு வாங்க வந்து தடுப்பூசி போட்டு போங்க…தைவானுக்கு சீனா அழைப்பு !

சீனாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தைவானியர்களுக்கு சீனா அழைப்பு. உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவல் கடந்த ஆண்டு முதல் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது, இதற்கான தடுப்பு நடவடிக்கைகளாக ஒவ்வொரு நாடும் அந்நாட்டு மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து சீனா அரசாங்கம் வெள்ளிக்கிழமை அன்று சீன தயாரிப்பான கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தைவானியர்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. இதனுடன் தைவான் தடைகளை நீக்கி அதன் மக்களை “மிகவும் பயனுள்ள” சீன தடுப்பூசிகளை பெற அனுமதிக்குமாறு அந்நாட்டுக்கு சீனா … Read more

சீனாவில் காட்டுயானைகள் ஒன்றாக தூங்கும் வைரல் புகைப்படம்..!

சீனாவில் நகர்ப்பகுதிக்குள் நுழைந்த 15 யானைகள் காட்டுப்பகுதியில் ஒன்றாக ஓய்வெடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சீனாவில் வனப்பகுதிக்கு அருகில் இருந்த ஹூனிங் நகருக்குள் திடீரென்று 15 காட்டுயானைகள் நுழைந்து அங்கு மக்கள் இருக்கும் பகுதிக்குள் சாதாரணமாக சுற்றி திரிந்து வருகிறது. இந்த காட்டுயானை கூட்டம் காட்டுக்குள் செல்லாமல் பாதை மாறி 480 கி.மீ நடந்து வந்துள்ளது. இதனால் தற்போது ஹூனிக் என்ற மக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. … Read more

3 வயது குழந்தைகளிலிருந்து தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி..!

சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனோவேக் என்ற தடுப்பூசி 3 முதல் 17 வயதிற்குரியவர்களுக்கு செலுத்த சீன அரசு அனுமதியளித்துள்ளது. இந்த தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனை முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தடுப்பூசி செலுத்துவதில் உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முதலில் தடுப்பூசியை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆகியோருக்கு செலுத்தப்பட்டது. பின்னர் முதியோருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு இளைஞர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனோவேக் என்ற தடுப்பூசியை … Read more

வீட்டில் வளர்க்க பாம்பை ஆர்டர் செய்த நபர்…! விஷம் நீக்கப்படாத பாம்பு டெலிவரி ஆனதால் அதிர்ச்சி…!

வீட்டில் பாம்பை செல்லப்பிராணியாக வளர்ப்பதற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். பாம்பை விற்ற நிறுவனம், விஷம் எடுக்கப்பட்ட பாம்பிற்கு பதிலாக, விஷம் எடுக்கப்படாத பாம்பை வழங்கியுள்ளது. சீனாவைப் பொறுத்தவரையில் பல விசித்திரமான விலங்குகள் மற்றும் பறவைகளை தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளப்பதுண்டு. சீனாவில் பாம்புகளை வீட்டில் வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வசித்து வரும் ஒருவர் தனது வீட்டில் பாம்பை செல்லப்பிராணியாக வளர்ப்பதற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இவ்வாறு ஆர்டர் செய்தவருக்கு பாம்பு வீட்டிற்கு வந்தது. பொதுவாக … Read more

சீனாவில் ரயில் மோதியதில் 9 ரயில்வே ஊழியர்கள் பலி..!

சீனாவில் ரயில்வே ஊழியர்கள் 9 பேர் மீது ரயில் மோதியதில், 9 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சீனாவில் உள்ள கன்சு மாகாணத்தில் இன்று அதிகாலை ஜின்சங்கில் உள்ள ரயில்வே ஊழியர்களின் மீது பயணியர் ரயில் ஒன்று மோதியுள்ளது. இதில் 9 ரயில்வே கட்டுமான ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த ரயில் ஜின்ஜியாங் மாகாணத்தின் உரும்கி நகரிலிருந்து ஜெயியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்க்கோ நகருக்கு சென்றுள்ளது. இந்த விபத்து குறித்த காரணம் வெளியாகாத நிலையில் இந்த சம்பத்தை குறித்த … Read more

2026 மற்றும் 2032 லும் கொரோனா பரவும்..அமெரிக்க தடுப்பூசி நிபுரணர் அதிர்ச்சி தகவல்!

கொரோனா மூலத்தை கண்டுபிடிக்காவிடில் எதிர்காலத்தில் பெருந்தொற்றை தவிர்க்க இயலாது. கொரோனா பெருந்தொற்று உலகமக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இதன் விளைவாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கோடியை  தாண்டி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சர்வதேச நாடுகளின் பொருளாதார சரிவு மற்றும் வேலையின்மை, குழந்தைகளின் கல்வி ஆகியவை கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகில் கொரோனாவானது சீனாவில் உள்ள வுஹான் நகரத்திலிருந்துதான் பரவ ஆரம்பித்தது என்று கூறப்படுகிறது, இதற்கு வலு சேர்க்கும் வகையிலேயே தற்போது பல ஆதாரங்களை உல நாடுகள் வெளியிட்டு வருகின்றனர். … Read more

இனி பெற்றோர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீனா அரசு அனுமதி..!

சீன அரசு  ஒரு தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது என்று அரசு நடத்தும் செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட  சீனாவில் மக்கள் தொகை சரிவை கண்டதாக சமீபத்தில் ஆய்வில் வெளியான தகவல்களுக்குப் பிறகு திருமணமான ஒரு தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் வரை இருக்கலாம் என்று சீனா இன்று  அறிவித்துள்ளது. ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தின் போது இந்த மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அரசு … Read more