டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிப்பு..!

சீனாவில்  குவாங்சு நகரில் பழமையான டைனோசர் முட்டைகள் கண்டுபிடிகப்படுள்ளன. அப்பகுதியில் தொழிலாளர்கள் கட்டிடபணியில்  ஈடுபட்டிருந்த போது இந்த முட்டை படிமங்கள் கிடைத்துள்ளன. இந்த முட்டைகள் சுமார் 130 ஆண்டுகள் பழமையானவை ஆகும். பாறைகளின் நடுவில் இருந்த 30 முட்டைகளை உடைக்காமல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எடுத்தனர். இதன் முலம் அந்த பகுதியில்  டைனோசர் வாழ்ந்திருக்க வாய்புகள் அதிகமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.முட்டையின் ஓடு 2 மி.மீ. வரை தடிமன் கொண்டுள்ளது.

கண்காணிப்பை தீவிரப்படுத்துகிறது சீனா!இந்திய பெருங்கடலில் தீவிர கண்காணிப்பு …..

  தற்போது சீனா தென்சீனக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில்  கண்காணிப்பை தீவிரப்படுத்தும் விதமாக மிதவைகள், கப்பல்கள், செயற்கைக் கோள்கள், மற்றும் நீரில் ஊடுருவிச் செல்லும் கருவிகள் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பை இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடல் பகுதியில் சீனா நிறுவியுள்ளது. இவற்றின் மூலம் அனுப்பப்படும் தகவல்கள் பராசல் தீவுகள், குவாங்டாங் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3 மையங்களை வந்து சேரும்.தென்சீனக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில், சீனா தனது … Read more

வரலாற்றில் இன்று டிச 26 சீனாவின் முதல் அதிபர் மாவோ பிறந்தநாள்…!

சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர், சிறந்த ராஜதந்திரி மா சே துங் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 26, 1893). இவருக்கு 18 வயது இருக்கும்போது, சீனா குடியரசாக அறிவிக்கப்பட்டது. அங்கு நிலையான, ஒற்றுமையான அரசு ஏற்படவில்லை. இந்நிலையில் இடதுசாரி அரசியல் கொள்கைகள் இவரைக் கவர்ந்தன. 1920-ல் கொள்கைப் பற்றுமிக்க பொதுவுடைமையாளர் ஆனார். விரைவில் பொதுவுடைமைக் கட்சியின் உயர் அதிகாரக் குழு உறுப்பினர் ஆனார். ஆட்சியைப் பிடிப்பதில் சீனப் பொதுவுடைமைக் கட்சி படிப்படியாக முன்னேறியது. … Read more

சீனாவில் உலகின் நீண்ட மின்பாதைத் அமைக்கும் பணி தீவிரம் !

சீனாவில் உலகின் நீண்ட மின்பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாக மஞ்சளாற்றின் இரு கரைகளிலும் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுக் கம்பி வடங்களைக் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சீனாவின் மேற்கில் உய்குர் என்னுமிடத்தில் இருந்து கிழக்கே அன்குய் வரை 3ஆயிரத்து 320கிலோமீட்டர் தொலைவுக்கு ஆயிரத்து நூறு கிலோவோல்ட் திறன் கொண்ட மின்னாற்றலைக் கடத்தும் மின்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பணி அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும். இதன் ஒரு கட்டமாக பையின் என்னுமிடத்தில் மஞ்சளாற்றின் இருகரைகளிலும் … Read more

வரலாற்றில் இன்று டிசம்பர் 21, 1768 – இந்தியாவின் வடக்கே இமயமலைப் பிரதேசத்தில் நேபாளம் என்ற புதிய நாடு உருவானது..!

வரலாற்றில் இன்று டிசம்பர் 21, 1768 – இந்தியாவின் வடக்கே இமயமலைப் பிரதேசத்தில் நேபாளம் என்ற புதிய நாடு உருவானது. பிருத்வி நாராயண் ஷா எனப்படும் கூர்க்கா வமிச அரசர் நேப்பாள நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்றார். இந்த நேப்பாள நாடு சமீப காலம் வரை ஒரு இந்து நாடாக இருந்துவந்தது. பாரதீய ஜனதா கட்சியின் எஜமானர்களாகவுள்ள பஜ்ரங் தள் போன்ற இந்துத்வா பரிவாரங்கள் நேபாளம் உள்ளிட்ட அகண்ட பாரதத்தை உருவாக்குவோம் என்று வாய்க் கொழுப்புடன் வீர வசனம் … Read more

ஆளில்லா விமானம் : இந்தியா மன்னிப்பு கூற வேண்டும் என சீனா கூறியுள்ளது

சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லையில் இந்தியா, சீனா, பூடான் என மூன்று நாடுகளும் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் அத்துமீறி சாலைப்பணிகளை மேற்கொண்டது. இதனை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை குவித்தன. சீனா, இந்திய படைகளை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தியது. மேலும், இந்திய ராணுவம் மீது போர் தொடுக்கப்போவதாக சீனா மிரட்டியது . இதனால் சிக்கிம் மாநில எல்லையில் இரண்டு மாதம் போர்ப்பதற்றம் நீடித்து … Read more

சீனாவில் RYB Eduction நடத்தும் பள்ளியில் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்…!

சீனாவில், RYB Eduction என்ற வணிக நிறுவனம் நடத்தும், குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் நடந்த துஷ்பிரயோகங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அங்கு தங்க வைக்கப் பட்ட குழந்தைகளுக்கு போதைவஸ்து கொடுத்து, மருத்துவ பரிசோதனை செய்யப் பட்டதாகவும், பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாகவும் பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். RYB Eduction நிறுவனத்திற்கு சீனா முழுவதும் கிளைகள் உள்ளன. அதன் பங்குகள் நியூ யார்க் பங்குச் சந்தையில் விற்கப் படுகின்றன. அது நடத்தும் பராமரிப்பு நிலையங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக … Read more