வௌவால்களில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா…! ஆய்வில் வெளியான தகவல்…!

வௌவால்களில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா…! ஆய்வில் வெளியான தகவல்…!

  • வௌவால்களிடம் ஆய்வு மேற்கொண்டதில் 24 வகையான கொரோன வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது.
  • ஒரு வைரஸ் பெருந்தொற்றுக்கு காரணமான SARS-COV-2வகையை ஓத்திருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் ஆனது சீனாவின் யுகான் மாகாணத்தில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. முதலில் அங்கு கண்டறியப்பட்ட நிலையில், இதனைத் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸின் பாதிப்பு பரவி வருகிறது. இந்த வைரஸ் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவில் வௌவால் இனத்தில் புதுவகையான வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். செல் என்ற ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ள, சீனாவின் ஷான்டாங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அறிவியலாளர்களின் ஆய்வறிக்கை வாயிலாக இது தெரியவந்துள்ளது.

யுனான் மாகாணத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் இருந்த வௌவால்களிடம் இருந்து, 2019-ம் ஆண்டு மே மாதம் முதல், 2010-ம் ஆண்டு நவம்பர் வரை மாதிரிகள் சேர்க்கப்பட்டு, ஆய்வு மேற்கொண்டதில் 24 வகையான கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவற்றில் ஒரு வைரஸ் பெருந்தொற்றுக்கு காரணமான SARS-COV-2வகையை ஓத்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வௌவால்களிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்குமா? என்ற ஆய்வுகள் தொடங்கியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube