மருத்துவமனை வார்டுக்குள் நுழைந்த யானைகள் வைரலாகும் வீடியோ

ராணுவ கன்டோன்மென்ட்டில் உள்ள மருத்துவமனை வார்டுக்குள் புகுந்த யானைகள் வைரலாகும் வீடியோ வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள ராணுவ கன்டோன்மென்ட்டில் உள்ள மருத்துவமனை வார்டுக்குள் யானைகள் நுழைந்தன. இச்சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் யானைகள் சுதந்திரமாக கட்டிடத்திற்குள் சுற்றி வருவதையும், அதனை அங்கிருந்தவர்கள் தூரத்தில் இருந்தே செல்போனில் படம் பிடிக்க முயன்றதையும் காணலாம். இந்த வீடியோ குறித்து சமூக வலைத்தளங்களில், யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது காடுகளை அழிப்பதன் … Read more

ரயிலில் மோதி யானைகள் உயிரிழக்கும் விவகாரம் – நீதிபதிகள் நேரில் ஆய்வு..!

தமிழகத்தின் பல பகுதிகளிலும் யானைகள் ரயிலில் மோதி உயிரிழக்கும் சம்பவமும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கோவையில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாமாகவே வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமில்லாமல், கோவை பாலக்காடு ரயில்வே சாலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணியன், இளந்திரையன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய மூன்று நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

#Breaking : கோவையில் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழப்பு ….!

கோவையில் ரயில் மோதி 2 குட்டி யானைகள் உட்பட மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. கோவை மதுக்கரை அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க யானைகள்  முயற்சித்துள்ளன. அப்பொழுது கேரளாவில் இருந்து வந்த ரயில் ஒன்று யானைகள் மீது மோதி உள்ளது. இதில் 2 குட்டி யானைகள் உட்பட 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

சீனாவில் காட்டுயானைகள் ஒன்றாக தூங்கும் வைரல் புகைப்படம்..!

சீனாவில் நகர்ப்பகுதிக்குள் நுழைந்த 15 யானைகள் காட்டுப்பகுதியில் ஒன்றாக ஓய்வெடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சீனாவில் வனப்பகுதிக்கு அருகில் இருந்த ஹூனிங் நகருக்குள் திடீரென்று 15 காட்டுயானைகள் நுழைந்து அங்கு மக்கள் இருக்கும் பகுதிக்குள் சாதாரணமாக சுற்றி திரிந்து வருகிறது. இந்த காட்டுயானை கூட்டம் காட்டுக்குள் செல்லாமல் பாதை மாறி 480 கி.மீ நடந்து வந்துள்ளது. இதனால் தற்போது ஹூனிக் என்ற மக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. … Read more

யானைகள் வழித்தடம் – அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை..!

யானைகள் வழித்தடங்களில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வாழைத்தோட்டம், மசினகுடி, சீகூர் பாலம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுவாச பிரச்சினை உடன் உலா வந்த ரிவால்டோ யானையை பிடித்து முகாமில் சிகிக்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால், வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், ரிவால்டோ யானையை பிடிக்க தடை கோரி … Read more