தைவானில் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம்…மக்கள் அச்சம்.!

Taiwan Earthquake

Taiwan Earthquake: தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பீதியில் உள்ளனர். தைவானில் நேற்று (திங்கட்கிழமை) இரவு தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வரை அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். நேற்று மாலை 5.08 மணியளவில் கிழக்கு ஹுவாலியன் கவுண்டியை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.3 ஆக பதிவானது. இதனால் தலைநகர் தைபேயில் சில கட்டிடங்கள் குலுங்கியதாகவும் தீவின் வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக … Read more

டிவிஸ்ட்….ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ஃட் கொடுத்த வெங்கட் பிரபு.!

venkat prabhu

The GOAT: நடிகர் பிரபுதேவா பிறந்த தினத்தை முன்னிட்டு ‘THE GREATEST OF ALL TIME’ படக்குழு சார்பில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றழைக்கப்படும் பிரபுதேவாவின் 51-வது பிறந்த தினம் இன்று. இவர் டான்ஸ் மாஸ்டர் மற்றும் திரைப்பட இயக்குனர் என பன்முக திறைமை கொண்டவர். தற்பொழுது, நடிகர் விஜய்யின் ‘The GOAT’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். பிரபுதேவாவின் 51-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ‘The GOAT’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் … Read more

சீனாவின் அச்சுறுத்தல்களில் இருந்து தைவானை பாதுகாப்போம்.! புதிய ஜனாதிபதி பேச்சு.!

Taiwan PM Lai Ching-te

சீனாவின் ஆதிக்கத்தில் இருந்துகொண்டு தனி நாடாக அங்கீகரிக்க தவித்து வரும் தைவானில், சீனாவின் எதிர்ப்பையும் மீறி நேற்று ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வெறும் 14 நாடுகள் மட்டுமே தைவானை தனி நாடாக அங்கீகரித்து உள்ளது. சீனாவின் ஆதிக்கத்தால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பிரதான நாடுகள் கூட தைவானை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. இருந்தாலும், அரசியல் மற்றும் ராணுவ ரீதியாக கைவானுக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கி வருகிறது. காதலரை கரம் பிடித்தார் நியூசிலாந்து முன்னாள் பிரதமர் … Read more

தைவானில் 6.8 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம் விடீயோக்களின் தொகுப்பு

தைவானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, 6.8 ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தைவானின் தென்கிழக்கு கடற்கரை பகுதியான டைடுங் நகரில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ரயில்கள் தடம் புரண்டன, மேலும் டைடுங் நகரின் ஒரு கடை இடிந்து விழுந்துள்ளது. தைவானின் மீட்புக்குழுவினர் தெரிவித்த தகவலில், ஒருவர் உயிரிழந்ததாகவும் 146 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும், … Read more

தைவான் எல்லையை கடந்த சீன ராணுவம்.? போர் பதற்றம் ஆரம்பமாகிறதா.?!

சீன ராணுவ ஜெட் விமானம்,  தைவான் வான்வழி எல்லையை கடந்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரும்,  ஆசிய நாடுகளின் அமெரிக்க பிரதிநிதியாகவும், இருக்கும் நான்சி பெலோசி தைவான் வருகையை அடுத்து சீனா தைவான் மீது கடும்  அதிருப்தியில் இருக்கிறது. நான்சி பெலோசி வருகையின் போதே, போர் விமானங்கள், போர் கப்பல்களை நிறுத்தி பயமுறுத்தியது சீனா.  தைவானை சுற்றியுள்ள சீன எல்லையில் தீவிர ராணுவ பயிற்சியில் சீன ராணுவம் ஈடுபட்டு … Read more

அமெரிக்க சபாநாயகர் தைவான் வருகை… 21 ராணுவ விமானங்களை களமிறங்கிய சீனா.!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகையை ஒட்டி,  தைவானை சுற்றி அருகில் உள்ள சீன  பகுதிகளில்  21 ராணுவ போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொன்டு வருகிறார். இவர் சிங்கப்பூர், மலேசியா சென்று நேற்று நாளை தைவான் சென்றார். தைவானுக்கு நான்சி பெலோசி வர கூடாது என சீனா எச்சரித்தது. ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அமெரிக்கா பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என … Read more

#BREAKING: ஜப்பானில் பலத்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.1…

கிழக்கு தைவான் மற்றும் தென்மேற்கு ஜப்பான் இடையே பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை இல்லை. ஜப்பான் நாட்டில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவும் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் யோனாகுனி என்ற நகரத்தில் இருந்து தென் மேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது, கிழக்கு தைவானுக்கும் தென்மேற்கு ஜப்பானுக்கும் இடையில் இன்று  ஒரு வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆனால் … Read more

தைவானிலிருந்து ஜப்பானுக்கு விமானத்தில் சென்ற காண்டாமிருகம்..!-இதுதான் காரணம்..!

தைவான் நாட்டில் உள்ள வெள்ளை காண்டாமிருகத்தை ஜப்பான் நாட்டிற்கு விமானம் வழியாக அழைத்து சென்றுள்ளனர். தைவான் நாட்டின் உயிரியல் பூங்காவில் வெள்ளை நிற பெண் காண்டாமிருகம் வாழ்ந்து வருகிறது. என்மா என்ற பெயருடைய இந்த பெண் காண்டாமிருகத்திற்கு 5 வயது ஆகிறது. ஆனால், இந்த காண்டாமிருகம் இனப்பெருக்கம் செய்வதற்கு அங்கு ஆண் காண்டாமிருகம் இல்லை. இதன் காரணத்தால் இந்த விலங்கினத்தை காப்பாற்றும் முயற்சியில் தைவான் ஈடுபட்டுள்ளது. இதனால் இந்த காண்டாமிருகத்தை ஜப்பான் நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு … Read more

சீனாவுக்கு வாங்க வந்து தடுப்பூசி போட்டு போங்க…தைவானுக்கு சீனா அழைப்பு !

சீனாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தைவானியர்களுக்கு சீனா அழைப்பு. உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவல் கடந்த ஆண்டு முதல் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது, இதற்கான தடுப்பு நடவடிக்கைகளாக ஒவ்வொரு நாடும் அந்நாட்டு மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து சீனா அரசாங்கம் வெள்ளிக்கிழமை அன்று சீன தயாரிப்பான கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தைவானியர்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. இதனுடன் தைவான் தடைகளை நீக்கி அதன் மக்களை “மிகவும் பயனுள்ள” சீன தடுப்பூசிகளை பெற அனுமதிக்குமாறு அந்நாட்டுக்கு சீனா … Read more

இந்தியாவுக்கு 150 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்பும் தைவான்!

தைவான் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு 150 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பப்பட்டு உள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜோசப் வு அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் லட்சக் கணக்கில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழப்புகள் ஒரு புறமிருக்க நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ வசதிகள் இன்றி மருத்துவமனை நிர்வாகம் திணறி வருகிறது. … Read more