வௌவால்களில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா…! ஆய்வில் வெளியான தகவல்…!

வௌவால்களிடம் ஆய்வு மேற்கொண்டதில் 24 வகையான கொரோன வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வைரஸ் பெருந்தொற்றுக்கு காரணமான SARS-COV-2வகையை ஓத்திருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் ஆனது சீனாவின் யுகான் மாகாணத்தில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. முதலில் அங்கு கண்டறியப்பட்ட நிலையில், இதனைத் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸின் பாதிப்பு பரவி வருகிறது. இந்த வைரஸ் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். சீனாவில் வௌவால் இனத்தில் புதுவகையான வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். … Read more

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு…!

இலங்கையில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. இந்நிலையில் இலங்கையில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் துறைத் தலைவர் நீலிகா மாலவிஜே  அவர்கள் கூறுகையில், ‘இலங்கையில் வீரியமிக்க புதிய வகை வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களை விட இந்த வைரஸ் அதி வேகமாக … Read more

இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு…! நோய் எதிர்ப்பு சக்தியை தாண்டி தாக்குமா…?

இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தப்பிக்கும் திறன்கொண்ட புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இந்நிலையில் இரட்டை பிரிவு கொண்ட உருமாறிய … Read more

இந்தியாவில் 18 மாநிலங்களில் உருமாறிய புதிய வகை கொரோனா…! – மத்திய அரசு

இந்தியாவில் மட்டும் 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.  கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், சமீப நாட்களாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸானது, இந்தியாவில் மட்டும் 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 10,787 பேர் மாதிரிகளை சோதனை மேற்கொண்டதில், 736 பேருக்கு மரபணு மாறிய புதிய வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக … Read more

புதிய வகை கொரோனா.. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70-ஐ கடந்தது!

பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய புதிய வகையான கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவதொடங்கிய நிலையில், அதில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலே இன்னும் குறையாத நிலையில், பிரிட்டனில் புதிய வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியது. இதனால் 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. ஆயினும் ஸ்பெயின், ஜப்பான், ஆகிய நாடுகளில் இந்த புதிய வகையான கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் உருமாறிய கொரோனா, இந்தியாவிலும் பரவதொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. … Read more

கொரோனா பரவலை தடுக்க இங்கிலாந்தில் “நான்கடுக்கு” ஊரடங்கு!

இங்கிலாந்தின் வடகிழக்கு, தென்மேற்கு பகுதிகள் மற்றும் மிட்லாண்ட்ஸ் பகுதிகளில் நான்கடுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, சில தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணிகள் … Read more

உத்திர பிரதேசத்தில் 2 வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா தொற்று!

உத்தரப் பிரதேசத்தில் 2 வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குழந்தையின் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.  உத்தரப் பிரதேசத்தில் 2 வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு முதல் முதலில் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் இவர் தான். குழந்தையின் பெற்றோர் ஏற்கனவே பழைய வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், குழந்தை மீரட்டில் உள்ள சுபார்தி மருத்துவக் கல்லூரியில் தனது பெற்றோர்களுடன் தனிப்பட்ட வார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். உருமாறிய கொரோனா தொற்று … Read more

பிரிட்டன் விமானங்களுக்கான தடை.. ஜனவரி 7 ஆம் தேதி வரை நீட்டிப்பு- மத்திய அரசு!

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கான தடை, ஜனவரி 7 ஆம் தேதி வரை நீடிக்கப்படவுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர்தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா பரவலே இன்னும் குறையாத நிலையில், தற்பொழுது பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருகிறது. இந்த உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு, ஏற்கனவே டிசம்பர் 22 ஆம் தேதி இரவு 11.59 மணி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை … Read more

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை?- மத்திய அமைச்சர்!

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும், அது காலவரையற்ற தடையாக இருக்காது என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.  உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து இறுதிக்கட்ட பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியா உட்பட … Read more

உருமாறிய கொரோனா வைரஸ் : இந்தியாவில் 6 பேருக்கு தொற்று உறுதி!

உருமாறிய கொரோன வைரஸ் பல நாடுகளில் பரவி வருகிற நிலையில், பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் கடந்த 10 மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.  இந்நிலையில்,கடந்த சில வாரங்களாக பிரிட்டனில் உருமாறிய  பரவி வருவதாக கூறப்பட்ட நிலையில், இந்த வைரஸானது … Read more