புதிய சாலை அமைக்க கோரிய மனு – மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பழைய சாலையை தோண்டிவிட்டு, புதிய சாலை அமைக்க வேண்டும் என கோரிய வலகழகை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.  பழைய சாலையை தோண்டி விட்டு, அந்த இடத்தில் முறையாக புதிய சாலை அமைக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஏற்கனவே இந்த மனுவில் பழைய சாலைகளை தோண்டாமல் புதியதாக சாலைகளை போடுவதால், கோவில்கள், சிலைகள், நினைவு சின்னங்கள் ஆகியவை தாழ்வான பகுதிகளுக்கு சென்று விடுவதால் பழைய சாலைகள் தோண்டப்பட்ட … Read more

அதிமுக-வின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை – ஐகோர்ட்

அதிமுக-வின் முதல் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், மக்கள் பொது இடங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. அதன்படி பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்வது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை தமிழக அரசு தெரிவித்திருந்தது. அந்தவகையில், அதிமுக-வின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில், தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று … Read more

#BREAKING: ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 4 அவதூறு வழக்குகள் ரத்து..!

ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 4 அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 12 அவதூறு வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுப்பது தொடர்பாகவும் விமர்சித்த தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அப்போது, நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டு 4 வழக்குகளை ரத்து செய்தது. மேலும், மீதம்முள்ள 8 வழக்கு விசாரணை வருகின்ற திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வலுவில்லாத ஆதாரங்களுடன் அவதூறு வழக்குகள் … Read more

#BREAKING: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கும் விடுமுறை அறிவிப்பு ..!

நாளை நிவர் புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிவர் புயல் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளைக்கு நாளை விடுமுறை என சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் அறிவித்துள்ளார்.

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி!

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. உலகம் முழுவதும் கொரோனா வைராஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுபடுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொரு நாட்டு அரசும் மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸ் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரையும் பதித்து வருகிறது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு … Read more

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை.! தமிழ், ஆங்கிலத்தில் விளம்பரப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சேர்க்கை திட்டத்தில் இலவச மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் விளம்பரப்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சேர்க்கை அதாவது 25% இடங்களுக்கு இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால் RTE திட்டத்திற்கான இலவச மாணவர் சேர்க்கைக்கான கால அட்டவணை … Read more

ஆயுஷ் அமைப்பில் உள்ள ‘S’ எனும் எழுத்தை நீக்கிவிடலாமா? – உயர்நீதிமன்றம் கேள்வி.!

சித்த மருத்துவ துறைக்கு குறைந்த நிதி ஒதுக்கியதால், ஆயுஷ் (AYUSH) அமைச்சகத்தின் பெயரிலிருந்து சித்த மருத்துவத்தை குறிப்பிடும் S எனும் எழுத்தை நீக்கி விடலாமா என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறி வீடியோ வெளியிட்டதற்காக சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை மாநகர காவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அதனை ரத்து செய்ய  சித்த மருத்துவர் தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர் … Read more

தலைமை நீதிபதி ஏ. பி சாஹி சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடியேற்றினார்!

தலைமை நீதிபதி ஏ பி சாஹி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய கொடியை ஏற்றினார். நாடு முழுவதும் இன்று 74 வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில், உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலை அருகில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி ஏ. பி சாஹி அவர்கள் கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்பு மத்திய தொழிலக பாதுகாப்பு படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற இந்நாள் மற்றும் … Read more

தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு கோரிய விண்ணப்பம்! தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு கோரிய விண்ணப்பம். ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் என அனைத்து தேர்தல்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யக் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர் என இட ஒதுக்கீடு இருப்பது போல, மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக 2016ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதியும், 2017ம் ஆண்டு பிப்ரவரி 28ம் … Read more

பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம்

பதஞ்சலி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ 10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோர், கொரோனா நோய்க்கு தங்கள் நிறுவனம் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறினார்கள். இந்நிலையில், மத்திய ஆயுஷ் அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்தது.  பதஞ்சலி நிறுவனம் கொரோனா நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது என்றால், அதுகுறித்த தகவல்களை அமைச்சகத்துக்கு அனுப்பி அதைப் பரிசோதித்து உண்மையானதுதானா என ஆய்வு செய்த பின்பு தான் விளம்பரம் செய்ய வேண்டும் … Read more