அதிமுக-வின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை – ஐகோர்ட்

அதிமுக-வின் முதல் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், மக்கள் பொது இடங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. அதன்படி பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்வது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை தமிழக அரசு தெரிவித்திருந்தது.

அந்தவகையில், அதிமுக-வின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில், தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று சுப்பிரமணி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இதனை விசாரித்த நீதிபதிகள் அதிமுக-வின் முதல் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் முக கவசம் அணிந்து இருந்தாலும், தனிமனித இடைவெளி பின்பற்றவில்லை.

இதனையடுத்து, சுப்பிரமணி என்பவர் தொடர்ந்த மனுவுக்கு, ஜனவரி 6-ம் தேதிக்குள், சுகாதார செயலாளர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பதில் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.