தனியார் பள்ளிகளில் கட்டமின்றி எல்.கே.ஜி : 20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…!

தனியார் பள்ளிகளில் கட்டமின்றி எல்.கே.ஜி வகுப்புகளில் சேர்வதற்கு 20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் அரசு ஒதுக்கிய 25 சதவீத இடங்களில் எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஸ். இதன் மூலமாக சேரக்கூடிய மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்க முடியும். இந்நிலையில் தற்பொழுதும் தனியார் பள்ளியில் எல்கேஜி வகுப்புகளில் இலவசமாக … Read more

தனியார் பள்ளிகள் 40 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் 40 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் முதல் தவணையில் 40 சதவீதமும், 2 ம் தவணையில் 35 சதவீதம் என 75  சதவீதம் கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாா் உத்தரவிட்டுள்ளார். மேலும்,இது தொடர்பாக,அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்,மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆகியோருக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், “கொரோனா இரண்டாவது … Read more

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் தனியார் பள்ளிகள்!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகள் கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு இலவச கல்வி வழங்க முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல மாநிலத்திலும் உள்ள அரசுகள் இலவச கல்வி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்து … Read more

அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் கட்டணத்தை தள்ளுபடி செய்ய உத்தரவு!

அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் கட்டணத்தை தள்ளுபடி செய்ய ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலும் மக்கள் மிகவும் பீதி அடைந்ததால் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் போக்குவரத்துத் துறைகள் என அனைத்து துறைகளும் மூடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில்தற்பொழுது பள்ளிகளை துவங்குவதற்கு அரசு அனுமதி அளித்து இருப்பதால் சில தனியார் பள்ளிகள் இதுவரை நடத்தப்படாத காலகட்டங்களும் சேர்த்து … Read more

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை.! தமிழ், ஆங்கிலத்தில் விளம்பரப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சேர்க்கை திட்டத்தில் இலவச மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் விளம்பரப்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சேர்க்கை அதாவது 25% இடங்களுக்கு இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால் RTE திட்டத்திற்கான இலவச மாணவர் சேர்க்கைக்கான கால அட்டவணை … Read more

தனியார் பள்ளிகள் குறித்த புகார்களுக்கு பிரத்யேக இணையதள வசதி- அமைச்சர் செங்கோட்டையன்.!

தனியார் பள்ளிகள் குறித்த குற்றச்சாட்டுகளை தெரிவிக்க பிரத்யேக இணையதள வசதி செயல்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் தனியார் பள்ளிகள் குறித்த குற்றச்சாட்டுகளை கூறி புகார் செய்வதற்காக பிரத்யேக இணையதள வசதி செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அவர் ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள மொடச்சூர் கீரிப்பள்ளம் கழிவுநீர் ஓடையில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் … Read more

மத்திய பிரதேசத்தில் அரசு, தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் -31 வரை மூடல்.!

கொரோனா காரணமாக ஆகஸ்ட்  -31 வரைஅனைத்து  அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் மூடுமாறு மத்தியப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. அன்லாக் -3 க்கான மத்திய அரசு வழிகாட்டுதல்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் ஆகஸ்ட் -31 வரை மூடப்படும் என்று நேற்று அறிவித்த நிலையில் ஆகஸ்ட் -31 வரை அனைத்து  அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் இயங்காது என மத்தியப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் நேற்று 917 பேருக்கு கொரோனாதொற்று பதிவானது … Read more