BIGG BOSS 5 : பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் சார் …!

இன்று கமல்ஹாசனின் பிறந்தநாளை பிக் பாஸ் போட்டியாளர்கள் கொண்டாடியது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியை இந்த ஆண்டும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசனின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. இன்று கமலஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் கமல் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களுக்கு கேக் மற்றும் சோறு உள்ளே … Read more

அறிவியல் மேதை மேரி கியூரி பிறந்த தினம் இன்று …!

அறிவியல் மேதை மேரி கியூரி பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1867 ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி போலந்தில் உள்ள வார்சா எனும் நகரில் பிறந்தவர் தான் மேரி கியூரி. ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு தனிமங்களை கண்டுபிடித்த இவர் மிகச் சிறந்த பெண் அறிவியல் மேதையாக விளங்குகிறார். உடலில் ஏற்படக்கூடிய கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க ரேடியத்தை பயன்படுத்திய நிலையில், அதனை கியூரி தெரபி என அழைத்தனர். கதிரியக்கம் பற்றிய ஒரு கோட்பாடு, கதிரியக்க … Read more

நாளை நம்மவர் கமல்ஹாசனின் பிறந்த நாள்;அனைவரும் வாருங்கள் கொண்டாடுவோம் – மக்கள் நீதி மய்யம் அழைப்பு!

நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் 67வது பிறந்தநாள் விழா, மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருவிழாவாகக் நாளை கொண்டாடப்படும் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாயகன் என்ற பெருமை பெற்ற நடிகரும்,மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களின் 67-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில்,நாள் முழுவதும் மக்களுக்குப் பயன்தரும் திட்டங்களைச் செயல்படுத்துவதே தனது பிறந்தநாளின் நோக்கம் என எண்ணிச் செயல்படும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாளில்,அனைவரும் கூடி வாழ்த்தலாம் … Read more

சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்த தினம் இன்று ….!

சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1870 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி வங்கதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள விக்ரம்பூரில் பிறந்தவர் தான் சித்தரஞ்சன் தாஸ். தேசபந்து என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இவர், அரசியலில் அதிக தீவிரம் காட்டியவர். மேலும் இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்த இவரை சுபாஷ் சந்திரபோஸ் தனது அரசியல் குரு என போற்றியுள்ளார். ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் கைவிட்டதால் … Read more

மரபினக் கலப்பு ஆராய்ச்சியாளரான ஜானகி அம்மாள் பிறந்த தினம் இன்று ….!

தாவரவியல் நிபுணரும், மரபினக் கலப்பு ஆராய்ச்சியாளரான ஜானகி அம்மாள் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1897 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி கேரள மாநிலத்திலுள்ள தலச்சேரி எனும் பகுதியில் பிறந்தவர் தான் ஜானகி அம்மாள். இவர் உலகப் புகழ்பெற்ற தாவரவியலாளர் ஆன சிரில் டார்லிங் உடன் இணைந்து தவிர குரோமோசோம் அட்லஸ் எனும் வரைபடத்தொகுப்பை 1945 இல் வெளியிட்டார். அதன் பின்பாக லண்டனில் உள்ள ஜான் இன்னஸ் தோட்டக்கலை நிறுவனத்தில் இணை மரபியலாளராக பணிபுரிந்துள்ளார். … Read more

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்திய சென் பிறந்த தினம் இன்று ….!

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்திய சென் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1933 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாந்திநிகேதனில் பிறந்தவர் தான் அமர்த்திய சென். பொருளாதாரக் கோட்பாடு, அரசியல் தத்துவம், பொது சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்ட இவர் பொருளாதார நிபுணராக திகழ்ந்துள்ளார். உணவு உற்பத்தி மட்டும் போதாது அதை வாங்க கூடிய மக்களுக்கும் சக்தி வேண்டும். பஞ்சம் மற்றும் வறட்சி … Read more

சிறந்த மருத்துவரும், சமூக ஆர்வலருமான மகேந்திரலால் சர்க்கார் பிறந்த தினம் இன்று …!

சிறந்த மருத்துவரும், சமூக ஆர்வலருமான மகேந்திரலால் சர்க்கார் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1883 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் பிறந்தவர் தான் மகேந்திரலால் சர்க்கார். இவர் சிறந்த ஹோமியோபதி மருத்துவரான வில்லியம் எழுதிய புத்தகத்திற்கு விமர்சனம் எழுதினார். ஹோமியோபதிக்கு எதிரான தன் கருத்துக்களை பதிவு செய்வதற்காக அந்த நூலைப் படித்துள்ளார். ஆனால் படித்து முடித்த பின்பு ஹோமியோபதி தான் சிறந்தது என அறிந்த அவர் இறுதியில் ஹோமியோபதியில் பயிற்சி பெற்றுள்ளார். … Read more

கண்டங்களின் பெயர்ச்சி பற்றிய கோட்பாடுகளை வகுத்த ஆல்ஃபிரெட் வெஜினர் பிறந்த தினம் இன்று …!

கண்டங்களின் பெயர்ச்சி பற்றிய கோட்பாடுகளை வகுத்த ஆல்ஃபிரெட் வெஜினர் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1880 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி ஜெர்மனியின் தலைநகராகிய பெர்லினில் பிறந்தவர் தான் ஆல்ஃபிரெட் வெஜினர். கண்டங்களின் பெயர்ச்சி பற்றிய கோட்பாடுகளை வகுத்தவர் இவர். வளிமண்டலம் மற்றும் பூமியின் காலநிலை மாற்றங்களை ஆய்வு செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த இவர் முதன்முறையாக 1906 ஆம் ஆண்டு இது குறித்த ஆராய்ச்சிக்காக கிரீன்லாந்துக்கு இரண்டு ஆண்டுகள் பயணம் மேற்கொண்டுள்ளார். இவ்வாறு … Read more

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் : மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மரியாதை!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். 1875 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி குஜராத்தில் பிறந்தவர் தான் சர்தார் வல்லபாய் படேல். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் இவர் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருந்த விஷயங்களை எதிர்த்துப் போராடியவர். இவரது பிறந்தநாள் ஆண்டு தோறும் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் … Read more

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் இன்று …!

இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1875 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி குஜராத்தில் பிறந்தவர் தான் சர்தார் வல்லபாய் படேல். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் இவர் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருந்த விஷயங்களை எதிர்த்துப் போராடியவர். மேலும் வக்கீல் பணியாற்றிய இவர், உள்ளூர் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து மிகவும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். 1917 ஆம் ஆண்டு … Read more