அறிவியல் மேதை மேரி கியூரி பிறந்த தினம் இன்று …!

அறிவியல் மேதை மேரி கியூரி பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது.

1867 ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி போலந்தில் உள்ள வார்சா எனும் நகரில் பிறந்தவர் தான் மேரி கியூரி. ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு தனிமங்களை கண்டுபிடித்த இவர் மிகச் சிறந்த பெண் அறிவியல் மேதையாக விளங்குகிறார். உடலில் ஏற்படக்கூடிய கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க ரேடியத்தை பயன்படுத்திய நிலையில், அதனை கியூரி தெரபி என அழைத்தனர்.

கதிரியக்கம் பற்றிய ஒரு கோட்பாடு, கதிரியக்க ஐசோடோப்புகளை  பிரித்து எடுக்கக்கூடிய நுட்பங்கள் ஆகியவை இவருடைய சாதனையாகப் புகழப்படுகிறது. இயற்பியல் மற்றும் வேதியியல் நோபல் பரிசை 1903 மற்றும் 1911 ஆகிய ஆண்டுகளில் பெற்ற இவர் மருத்துவத்துறையில் பல அறிவியல் மேன்மைகளை புகுத்தியுள்ளார். இவர் 1934 ஆம் ஆண்டு தனது 66வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

author avatar
Rebekal