மரபினக் கலப்பு ஆராய்ச்சியாளரான ஜானகி அம்மாள் பிறந்த தினம் இன்று ….!

தாவரவியல் நிபுணரும், மரபினக் கலப்பு ஆராய்ச்சியாளரான ஜானகி அம்மாள் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1897 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி கேரள மாநிலத்திலுள்ள தலச்சேரி எனும் பகுதியில் பிறந்தவர் தான் ஜானகி அம்மாள். இவர் உலகப் புகழ்பெற்ற தாவரவியலாளர் ஆன சிரில் டார்லிங் உடன் இணைந்து தவிர குரோமோசோம் அட்லஸ் எனும் வரைபடத்தொகுப்பை 1945 இல் வெளியிட்டார்.

அதன் பின்பாக லண்டனில் உள்ள ஜான் இன்னஸ் தோட்டக்கலை நிறுவனத்தில் இணை மரபியலாளராக பணிபுரிந்துள்ளார். இந்தியத் தாவரவியல் சர்வே அமைப்பை சீரமைத்து ஒருங்கிணைப்பதற்காக இவருக்கு ஜவஹர்லால் நேரு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று லண்டனில் இருந்து மீண்டும் நாடு திரும்பிய இவர் தலைமை இயக்குனராக பொறுப்பேற்றுக் பல கலப்பு மரபின வகைகளை உருவாக்கி உள்ளார்.

இவரது சிறப்பு கலப்பு மற்றும் மரபின கலப்பு வகைகள் காரணமாக பல்வேறு கரும்பு வகைகள் உருவாக வழியாக இருந்துள்ளது. வாழ்நாள் முழுவதும் இந்திய பாரம்பரிய அறிவியல் பற்றிய அறிவை திரட்டும் பணியில் ஈடுபட்ட ஜானகி அம்மாள் 1984 ஆம் ஆண்டு தனது 86 வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

author avatar
Rebekal