கி.வீரமணியின் 89-வது பிறந்தநாள் – முதல்வர் நேரில் வாழ்த்து!

திராவிட கழக தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் 89-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளான இன்று அடையாரில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்து … Read more

6 அடி வெள்ளி செங்கோல் கொடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பொள்ளாச்சி திமுக இளைஞரணி நிர்வாகிகள்..!

பொள்ளாச்சி திமுக இளைஞரணி நிர்வாகிகள், உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, 6 அடி வெள்ளி செங்கோல் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து இவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காலை முதலே உதயநிதி அவர்களின் வீட்டிற்கு அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவிப்பதற்காக வீட்டிற்கு வந்த வண்ணம் … Read more

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை..!

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது பிறந்தநாளையொட்டி,  சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து இவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது பிறந்தநாளையொட்டி,  சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை … Read more

உத்தரபிரதேச முன்னாள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்..!

உத்தரபிரதேச முன்னாள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்.  முலாயம் சிங் யாதவ் உத்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் ஆவார். இவர் இன்று தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாட்டின் அரசியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர். அவர் ஆரோக்கியமாகவும் நீண்ட … Read more

புகழ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் – வைரல் வீடியோ உள்ளே!

விஜய் டிவி புகழ் பிறந்தநாளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகி தற்போது விஜய் டிவியின் பிரபலமாக வலம் வருபவர் தான் புகழ். இவரது நகைச்சுவை பேச்சுக்கும், நடிப்புத் திறனும் திறமைக்கும் இவருக்கு பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் புகழ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளிற்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், … Read more

ஜவர்ஹலால் நேரு பிறந்த தினம் : நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை!

இன்று ஜவர்ஹலால் நேரு பிறந்த தினம் கொண்டாடப்படும் நிலையில், அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை செலுத்தியுள்ளார். 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தவர் தான் பண்டித ஜவஹர்லால் நேரு. இந்தியாவின் முதல் பிரதமரான இவர் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். எனவே இவரது பிறந்த தினம் ஆண்டுதோறும் நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றும் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் 132 வது பிறந்த நாள் … Read more

தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகி பி.சுசீலா பிறந்த தினம் இன்று …!

தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகி பி.சுசீலா பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1935 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜய நகரில் பிறந்தவர் தான் பி.சுசிலா. பள்ளியில் படிக்கும் போதே இவருக்கு இசையில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை ஆகிய துவாரம் வெங்கடசாமி நாயுடு அவர்களிடம் இசை பயின்றுள்ளார். பின் 1955 ஆம் ஆண்டு இவர் பாடிய எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் எனும் … Read more

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம் …!இன்று

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1888 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி சவுதி அரேபியாவில் பிறந்தவர் தான் மௌலானா அபுல் கலாம் ஆசாத். இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகிய இவர் 1947 ஆம் ஆண்டு முதல் 1958 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் கல்வி அமைச்சராக இருந்தார். கல்வித் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிறந்தவராக இருந்த இவர், 1951ஆம் ஆண்டு இந்திய தொழில்நுட்ப கழகத்தை … Read more

மாற்றம் வேண்டுமென ஆற்றலுடன் முன் செல்லும் அன்புத் தம்பி..! சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்..!

மாற்றம் வேண்டுமென ஆற்றலுடன் முன் செல்லும் அன்புத் தம்பி செந்தமிழன் சீமான்  அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘தமிழர் நலனுக்காகத் தளராத தன்முனைப்புடன் உழைப்பவர், மாற்றம் வேண்டுமென ஆற்றலுடன் … Read more

தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்த தினம் வரலாற்றில் இன்று ….!

தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1680 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இத்தாலியில் பிறந்தவர் தான் வீரமாமுனிவர். கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி எனும் தனது இயற்பெயரை தைரியநாதர் என மாற்றிக் கொண்டார். அவர் தமிழ் மீது இருந்த பற்றினாலும் இந்த பெயர் சமஸ்கிருத மொழி என்பதை அறிந்து கொண்டதாலும் தனது பெயரை இறுதியாக வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார். இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றை படைத்த இவர் இலத்தீன் மொழியில் … Read more