தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்த தினம் வரலாற்றில் இன்று ….!

தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது.

1680 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இத்தாலியில் பிறந்தவர் தான் வீரமாமுனிவர். கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி எனும் தனது இயற்பெயரை தைரியநாதர் என மாற்றிக் கொண்டார். அவர் தமிழ் மீது இருந்த பற்றினாலும் இந்த பெயர் சமஸ்கிருத மொழி என்பதை அறிந்து கொண்டதாலும் தனது பெயரை இறுதியாக வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.

இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றை படைத்த இவர் இலத்தீன் மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளார். தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகியவற்றை பல ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்த்துள்ளார். ஐந்திலக்கணம், எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவற்றையும் இவர் தொகுத்துள்ளார்.

கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூல் மூலம் தமிழ்மொழியில் முதன்முதலாக பேச்சுத்தமிழை விவரித்தார். இயேசு காவியமான தேம்பாவணியை இயற்றியவர் இவர் தான். இதுவரை 23 நூல்களினால் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பெரும்பாடுபட்டு பணியாற்றிய வீரமாமுனிவர்  1747ஆம் ஆண்டு தனது 66 வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

author avatar
Rebekal