இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம் …!இன்று

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1888 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி சவுதி அரேபியாவில் பிறந்தவர் தான் மௌலானா அபுல் கலாம் ஆசாத். இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகிய இவர் 1947 ஆம் ஆண்டு முதல் 1958 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் கல்வி அமைச்சராக இருந்தார். கல்வித் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிறந்தவராக இருந்த இவர், 1951ஆம் ஆண்டு இந்திய தொழில்நுட்ப கழகத்தை உருவாக்கினார்.

சாகித்ய அகாடமி உருவாகுவதற்கும் வழிவகுத்தார். இந்தியாவை கல்வியில் முன்னேறிய நாடாக மாற்ற வேண்டும் என கனவு கண்டவர் இவர். மேலும் இவர் உயிருடன் இருக்கும்போதே பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்ட நிலையில், அவர் பாரத ரத்னா விருது தேர்வுக் குழு உறுப்பினராக இருந்ததால் அந்த விருதைப் பெற மறுத்துவிட்டார்.

எனவே இவரது மறைவுக்குப் பின்னர் 1992 ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் 1958 ஆம் ஆண்டு தனது 69-வது வயதில் இவர் மறைந்தார். இவரது  சாதனைகளை நினைவு கூறுவதற்காக இவரது பிறந்த தினம் தேசிய கல்வி தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

author avatar
Rebekal