வீடு தேடி ரேஷன் திட்டம் ஊழியர்களுக்கு ஒரு நாள் நோபல் பரிசு வழங்கப்படும் – மேற்கு வங்க முதல்வர்!

வீடு தேடி ரேஷன் திட்டத்தின் ஊழியர்களுக்கு ஒரு நாள் நோபல் பரிசு வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் துவார ரேஷன் எனும் வீடு தேடி செல்லும் ரேஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக 10 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவார்கள் எனவும், இனி … Read more

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்திய சென் பிறந்த தினம் இன்று ….!

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்திய சென் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1933 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாந்திநிகேதனில் பிறந்தவர் தான் அமர்த்திய சென். பொருளாதாரக் கோட்பாடு, அரசியல் தத்துவம், பொது சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்ட இவர் பொருளாதார நிபுணராக திகழ்ந்துள்ளார். உணவு உற்பத்தி மட்டும் போதாது அதை வாங்க கூடிய மக்களுக்கும் சக்தி வேண்டும். பஞ்சம் மற்றும் வறட்சி … Read more

#BREAKING: இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2021-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசு கடந்த நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2021-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை தேர்வு குழு அறிவித்துள்ளது. தான்சானியா நாட்டை சேர்ந்த அப்துல் ரசாக் குர்னா தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவை வளைகுடா நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து செல்லும் மக்களின் … Read more

“இந்தியாவில் நோபல் பரிசுக்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படாதது ஏன்?” -பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி..!

இந்தியாவில் நோபல் பரிசு வெல்வதற்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படாதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம்,இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.அந்த வகையில்,நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.மேலும்,நோபல் பரிசு அக்.11 ஆம் தேதி வரை அறிவிக்கப்படுகிறது. அதன்படி,நேற்று முன்தினம் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.இதனையடுத்து,நடப்பு ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த சியுகுரோ மனாபே,ஜெர்மனை சேர்ந்த கிளாஸ் ஹாசெல்மேன்,மற்றும் … Read more

#Breaking:இருவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு..!

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவத்திற்கான நோபல்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு டேவிட் ஜூலியஸ்,ஆர்டெம் படபூட்டியன் ஆகிய இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் ஆகியோருக்கு “வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டுபிடித்ததற்காக” இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது,வெப்பம்,வலி,உடல் அழுத்தம் ஆகியவற்றை தொடாமல் உணரக்கூடிய சென்சார் கருவியைக் கண்டுபிடித்ததற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 Nobel Prize in Physiology or Medicine awarded jointly to David Julius & Ardem … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு;நல்ல வேலை நான் தப்பித்து விட்டேன்” -அமைச்சர் செல்லூர் ராஜு…!

அணில்களால் மின்தடை ஏற்படுகிறது என்று கண்டுபிடித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,தமிழகத்தில் செடி, கொடிகளால் மட்டும் மின்வெட்டு பிரச்சனை ஏற்படுவதில்லை.அதன் மேலே ஓடும் அணில்கள் இரண்டு வயர்களை உரசுவதாலும் மின் துண்டிப்பு ஏற்பட்டு,அதனால் மின்தடை ஏற்படுவதாக கூறியிருந்தார். இதனையடுத்து,நெட்டிசன்கள்,அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமைச்சர் செந்தில் … Read more

அடுத்த நோபல் பரிசு தமிழ்நாட்டை ஏலம் போடுபவர்களுக்கு காத்திருக்கிறது – கமல்!

அடுத்த நோபல் பரிசு தமிழ்நாட்டை ஏலம் போடுபவர்களுக்கு காத்திருக்கிறது என கமல் பதிவிட்டுள்ளார். அண்மையில் ஏலமிடும் முறையை ஆய்வு செய்ததற்காக இரு அமெரிக்க அறிஞர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்காக பலரும் தங்களது பாராட்டு தெரிவித்து வந்தனர். தற்போது மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் தமிழ்த் திரையுலக நடிகருமாகிய கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ஏல முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் போட்டு தமிழ்நாட்டை … Read more

#புகழ்பெற்ற நோபலுக்கு பரிசுத்தொகை அதிகரிப்பு!

உலகப்புகழ்பெற்ற நோபல் பரிசு தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நோபல் பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நடப்பு ஆண்டிற்கான, மருத்துவம், வேதியியல், கலாசாரம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்கான பரிசு அக்5ந்தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 2011ம் ஆண்டு, நிதிநிலையை மேம்படுத்துவதற்காக, நோபல் பரிசுத்தொகை குறைக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தற்போது, நிதி நிலைமை மேம்பட்டதை அடுத்து  பரிசுத்தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது … Read more

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை..!

இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த சில வாரங்களிலேயே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2021 அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியன் டைப்ரிங்-கெஜெடே அவர் தனது நியமனக் கடிதத்தில் கூறியதாவது; இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான உறவுகளை ஸ்தாபிப்பதில் டிரம்ப் நிர்வாகம் முக்கிய பங்கு வகித்துள்ளது என்று கூறினார். முரண்பட்ட கட்சிகளுக்கிடையேயான தொடர்பை எளிதாக்குவதில் டிரம்ப் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்று  டைப்ரிங்-கெஜெடே … Read more

அரை நூற்றாண்டுக்கு பின் கொரோனா அச்சத்தால் ரத்து செய்யப்பட்ட நோபல் விருந்து.!

கொரோனா அச்சத்தால் அரை நூற்றாண்டுக்கு பின்னர் முதல் முறையாக நோபல் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. விஞ்ஞானம், இலக்கியம் ஆகியவற்றின் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருது தான் நோபல் பரிசு. 1901-முதல் ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான ஆல்பர்ட் நோபல் அவர்களால் உருவாக்கப்பட்டு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக 2020-ம் ஆண்டின் நோபல் பரிசுக்கான விருந்து ரத்து செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை செவ்வாயன்று ஸ்வீடிஷ் நாளேடான டேஜென்ஸ் … Read more