சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்த தினம் இன்று ….!

சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1870 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி வங்கதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள விக்ரம்பூரில் பிறந்தவர் தான் சித்தரஞ்சன் தாஸ். தேசபந்து என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இவர், அரசியலில் அதிக தீவிரம் காட்டியவர். மேலும் இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்த இவரை சுபாஷ் சந்திரபோஸ் தனது அரசியல் குரு என போற்றியுள்ளார்.

ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் கைவிட்டதால் அதிருப்தி அடைந்த இவர் 1922 ஆம் ஆண்டு சுயராஜ்ய கட்சியை தொடங்கினார். 1923ஆம் ஆண்டு நாடாளுமன்ற கவுன்சில் உறுப்பினரானார். 1924ஆம் ஆண்டு நடந்த கல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றி பெற்று, சித்தரஞ்சன் தாஸ் மேயராகினார்.

சாகர் சங்கீத் கவிதைத் தொகுப்பு, நாராயண்மாலா, கிஷோர் கிஷோரி, அந்தர்யாமி உள்ளிட்ட புத்தகங்கள் மற்றும் இவர் திலகர் குறித்து பல நூல்கள் எழுதியுள்ளார். மேலும், இவர் தன் வீட்டையும் அதைச் சுற்றியுள்ள நிலங்களையும் ஆதரவற்ற பெண்களின் நலனுக்காக எழுதி வைத்தார். அதன் பின்பதாக 1925 ஆம் ஆண்டு 54 வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

author avatar
Rebekal