கொரோனா காலத்தில் வங்கி கடன்களில் வட்டிக்கு வட்டி! உச்சநீதிமன்றத்தில் பிரமாண பாத்திரம் தாக்கல் செய்த ரிசர்வ் வங்கி!

காமத் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய தொகுக்கப்பட்ட பிரமாண பத்திரத்தை ரிசர்வ் வங்கி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா காலத்தில், வங்கிக்கடன் வட்டிக்கு வட்டி வசூலிப்பது தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் … Read more

வங்கியிலிருந்த 20 லட்சம் பணத்தை அசராமல் ஆட்டையை போட்ட 11 வயது சிறுவன்!

வங்கியிலிருந்த 20 லட்சம் பணத்தை கொஞ்சமும் அசராமல் ஆட்டையை போட்ட 11 வயது சிறுவனின் செயல் சிசிடிவியில் சிக்கியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் எனும் மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை வங்கியில் தற்பொழுது ஆச்சரியப்படத்தக்க விஷயம் ஒன்று நடந்துள்ளது. அதாவது சாதாரணமாக நுழையும் சிறுவன் கிட்டத்தட்ட 20 லட்சம் பணத்தை வங்கியில் இருந்து தான் எடுத்து சென்ற பையில் எடுத்து வைத்து சென்றுள்ளார். ஆனால் அவர் வெளியிலிருந்த வங்கி காவலர்களை தாண்டி சாதாரணமாக … Read more

வங்கி அதிகாரிகளுடன் 3-ம் தேதி மத்திய நிதியமைச்சர் ஆலோசனை

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மூன்று மாதங்களாக மத்திய அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  கொரோனாவால் வங்கிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது. கடன் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பல நெருக்கடிகளை வங்கிகள் சந்தித்துள்ளன. இதில், இருந்து மீண்டுவர ரிசர்வ் வங்கி சமீபத்தில் தீர்வு திட்டத்தை வெளியிட்டு இருந்தது. இந்த தீர்வு திட்டத்தை அமல்படுத்துவதால் எதிர்கொள்ளும்  பிரச்சினைகள் குறித்து வங்கிகள் மற்றும் … Read more

அடுத்த மாதம் இந்த நாட்களில் வங்கிகள் மூடல்.. மாநில வாரியான பட்டியல்.!

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறைகள் மட்டுமல்லாமல் பல மத விழாக்கள் உள்ளன. அவை நீங்கள் எந்த மாநிலத்தில் வாழ்கிறீர்கள் என்பதைப் பொறுத்து வங்கி விடுமுறையாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். பிராந்திய விடுமுறைகள் அந்தந்த மாநில அரசுகளால் தீர்மானிக்கப்படுகின்றன. பொதுவாக இரண்டாவது, நான்காவது சனி மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் தவிர, வங்கிகள் மற்ற நாட்களிலும் செயல்படுகின்றனர். இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் படி, பொது விடுமுறை நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும், அதாவது அனைத்து வங்கிகளுக்கும் குடியரசு தினம் … Read more

வங்கிகள் கடன் வழங்க மறுப்பு தெரிவித்தால் புகார் அளிக்கலாம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமான்

வங்கிகள் கடன் வழங்க மறுப்பு தெரிவித்தால் புகார் அளிக்கலாம். கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், சிறு குறு தொழில் செய்யும் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்திய வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பின், நிர்வாகக் குழு கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மேம்பாட்டுக்காகவே அவசர கால கடனுதவி திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியதாகவும், அத்திட்டத்தின் கீழ் வங்கிகள் … Read more

இந்த மாதம் இத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காதா? இதோ விடுமுறை பட்டியல்!

ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை. ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும் ஒவ்வொரு மாநிலங்களை பொறுத்து வங்கி விடுமுறைகள் பல்வேறு மாநிலங்களில் வேறுபடுகின்றன. வங்கி விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் அல்லது அந்த மாநிலங்களில் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களின் அறிவிப்பையும் சார்ந்துள்ளது. ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை பட்டியல் ஆகஸ்ட் 3, 2020 (திங்கள்) – ரக்ஷா பந்தன் ஆகஸ்ட் 11, 2020 (செவ்வாய்) … Read more

வங்கிகள் மற்றும் வங்கிகள் சாராத நிதி அமைப்புகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

வங்கிகள் மற்றும் வங்கிகள் சாராத நிதி அமைப்புகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வங்கிகள் மற்றும் வங்கிகள் சாராத நிதி அமைப்புகளுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பங்குதாரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் கடன், தொழில்நுட்பத்தின் மூலமான பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதித் துறையின் … Read more

கூட்டுறவின் நோக்கமும் சிதையும், சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும்-மு.க.ஸ்டாலின்

கூட்டுறவின் நோக்கமும் சிதையும்; சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ்  கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல்  அளிக்கப்பட்டது. கூட்டுறவு வங்கிகளில் வைப்புத் தொகையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.கூட்டுறவு வங்கி மூலம் நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் கடன், மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டு வந்தது. … Read more

மாஸ்க் இல்லனா ஒன்னும் வாங்க முடியாது! சென்னை மாநகராட்சியின் புதிய விதிமுறைகள்!

சென்னை மாநகராட்சியின் புதிய விதிமுறைகள். தமிழகம்  முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழகத்தில் அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து, சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், சென்னை மாநகராட்சி சில விதிகளைப் பட்டியலிட்டுள்ளது. ரேஷன் கடை 200 கார்டுகளை மேல் உள்ள கடைகளை பிரிக்க வேண்டும். கடைகளில், பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற நடவடிக்கை செய்ய வேண்டும். டோக்கனில் … Read more

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு 8 பேர் தேர்வு! ஜூலை 23-ல் நேர்காணல்!

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு 8 பேர் தேர்வு. என்.எஸ்.விஸ்வநாதன் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பணிபுரிந்து வந்தார். இவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்ட காலம் முடிவடைவதற்கு முன்பதாகவே, மார்ச்-3ம் தேதி இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, காலியான பணியிடத்துக்கு, துணை ஆளுநரை நியமிப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, நிதித்துறை நியமனங்களுக்கான தேடல் குழு, 8 பேரின் பெயர்களை இறுதி செய்துள்ளது. இவர்களுக்கு, வரும் 23-ம் தேதி காணொளி வாயிலாக நேர்முகத்தேர்வு … Read more