ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம்

Air india: அமெரிக்காவில் இருந்து இந்தியாவின் மும்பை நகருக்கு வந்த 80 வயது முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து கண்காணிப்பு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 12ம் தேதியன்று அமெரிக்காவிலிருந்து வயது முதிர்ந்த தம்பதி மும்பை வந்தனர். Read More – உச்சம் தொட்ட இந்தியாவின் GDP வளர்ச்சி! மூன்றாம் காலாண்டில் 8.4 சதவீதம் இதற்காக பயணச்சீட்டு முன்பதிவு செய்த போது வீல் சேர் வசதி … Read more

ஆகஸ்ட் 20 முதல்  24 கூடுதல் உள்நாட்டு விமானங்களை ஏர் இந்தியா இயக்க உள்ளது..

இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, வரும் ஆகஸ்ட் 20 முதல் டெல்லி – மும்பை, மும்பை – பெங்களூரு, மும்பை – அகமதாபாத், மும்பை – சென்னை, மும்பை – ஹைதராபாத் மற்றும்  அகமதாபாத்-புனே ஆகிய வழித்தடங்களில் 24 கூடுதல் உள்நாட்டு விமானங்களை ஏர் இந்தியா இயக்கவுள்ளது. கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட டிக்கெட் விலைகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தநிலையில், ஏர் இந்தியாவின் இந்த நடவடிக்கை … Read more

ஏர் இந்தியாவே மீண்டும் வருக! – ரத்தன் டாடா நெகிழ்ச்சி ட்வீட்!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியதற்கு ட்விட்டரில் டாடா குழும கவுரவ தலைவர் ரத்தன் டாடா வரவேற்பு. நஷ்டத்தில் இயங்கி வந்த இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமாகியுள்ளது. டாடா குழுமத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு விற்கப்பட்டதாகவும், ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கலை மத்திய அமைச்சர்கள் குழு இறுதி … Read more

67 ஆண்டுகளுக்கு பின் டாடா வசம் செல்லும் ஏர் இந்தியா?

டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா 1953-ஆம் ஆண்டு நாட்டுடமை ஆக்கப்பட்ட நிலையில், மீண்டும் அந்நிறுவனத்திடமே செல்கிறது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கும் ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியாவை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட தொகை மற்றும் திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் கூறப்படுகிறது. ஜே.ஆர்.டி.டாடா தொடங்கிய டாடா ஏர்மெயில், டாடா ஏர் லைன்ஸாக மாறியபின் ஏர் இந்தியாவாக உருவாகியது. இந்தியாவின் முதல் விமான நிறுவனமான … Read more

#Breaking:ஆப்கானிஸ்தானில் விமான சேவை ரத்து ;இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ..!

ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தாலிபான்கள் ஈடுபட்டு வந்தனர்.இதனையடுத்து,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நேற்று தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தையம்  கைப்பற்றினார்கள். இதனால்,அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானில் இருந்து வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தாலிபான்கள் இன்று காலை அறிவித்தனர்.இதனால்,ஆட்சி பொறுப்பு தாலிபான்கள் வசம் … Read more

மின் கம்பத்தில் மோதி ஏர் இந்தியா விமானம் விபத்து..!

விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் 64 பயணிகளுடன் தரையிறங்கும் போது  மின் கம்பத்தில் மோதியது. விமானத்தின் சிறகு ஓடுபாதையின் அருகில் இருந்த கம்பத்தில் மோதியது. விமானி குழப்பத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். விமானத்தில் பயணம் செய்த 64 பயணிகளும் பாதுகாப்பாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ரூ.498 கோடி பாக்கி!

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று மாநிலங்களவையில் கூறியதாவது, கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி, பல்வேறு மாநில அரசு மற்றும் மத்திய அரசு  ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ .498.17 கோடி பாக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார். மொத்தம் வி.வி.ஐ.பி பயணத்திற்கு 84.57 கோடி ரூபாயும், வெளிநாட்டில் சிக்கியவர்கள் மீட்பு பயணத்திற்கு 61 12.61 கோடியும், நிவாரண நடவடிக்கைகளுக்கு 9.67 கோடி ரூபாயும், நிலுவைத் தொகையாக 391.32 கோடி ரூபாயும் உள்ளது … Read more

பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவன பங்குகள் விற்பனை.. நிதியமைச்சர் அறிவிப்பு..!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். “மேட் இன் இந்தியா” டேப்லெட் கணினியைப் பயன்படுத்தி சீதாராமன் 2021 பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் தற்போதைய சூழலில் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது கோரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் தாக்கல் செய்யப்படுவதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இன்று பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை , ரயில்வே உள்ளிட்டவற்றிற்கு நிதி ஒத்துக்கப்பட்ட பொதுத்துறை … Read more

டெல்லியில் இருந்து சிட்னிக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று இயக்கப்படுகிறது!

டெல்லியில் இருந்து சிட்னிக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று முதல் இயக்கப்படுகிறது. இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இருப்பினும் மத்திய அரசு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மார்ச் மாதம் முதல் இயங்காமல் இருந்த விமானங்கள் சில கட்டுப்பாடுகளுடன் கடந்த மே மாதம் முதல் இயங்க அனுமதியளிக்கப்பட்டது. இதன்படி ஐந்தாம் கட்ட தளர்வாக வருகிற அக்டோபர் 10 ஆம் தேதியிலிருந்து … Read more

கொரோனா தொற்று எதிரொலி… ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வர தடை…

ஹாங்காங்கில் மீண்டும் புதிதாக  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 23 பேரில் மூன்றில் ஒரு பங்கு பேர், ஏர் இந்தியா விமானம் மூலமாக வந்தவர்கள்  என்று ஹாங்காங் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஏர் இந்தியா விமானங்கள் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ஹாங்காங் வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானங்களுக்கும் ஹாங்காங்க் அரசு தடை விதித்து இருந்தது. … Read more