ஆப்கானிஸ்தானில் டேங்கர் லாரி மீது பேருந்து மோதி விபத்து – 21 பேர் பலி.!

bus collision with tanker

Afghanistan: தெற்கு ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் இன்று காலை பேருந்து ஒன்று எண்ணெய் டேங்கர் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்ததாகவும், 38 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. READ MORE – பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 7 பேர் பலி.! ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலுக்கும் ஹெல்மண்டின் க்ரிஷ்க் மாவட்டத்தில் வடக்கு ஹெராட் நகருக்கும் இடையிலான பிரதான நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இந்த விபத்து … Read more

#BREAKING: காபூலில் துப்பாக்கிச்சூடு…!

ஆப்கானிஸ்தானின் காபூலில் சீன பிரஜைகள் அதிகம் வசிக்கும் ஹோட்டல் மீது கடுமையான தாக்குதல்கள். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டல் அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனர்கள் அதிகம் சென்று வரும் ஹோட்டலை குறிவைத்து கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. காபூலில் உள்ள சீன தேசிய ஹோட்டலில் இன்று நடந்த தாக்குதலில் தலிபான் தீவிரவாதி ஒருவர் காயமடைந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. காபூல் நகரின் ஷாஹ்ரே நாவ் பகுதியில் உள்ள சீனர்களின் விருந்தினர் மாளிகை மீது … Read more

ஆப்கானிஸ்தான்; காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு..18 பேர் காயம்!

காபூலில் மசூதிக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழப்பு. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்தும் மசூதிக்கு வெளியே பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 18 படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மசூதிக்கு அருகே ஒரு வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. … Read more

#BREAKING: ஆப்கானிஸ்தான் குருத்வாராவில் குண்டுவெடிப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் குருத்வாராவில் ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலி. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கர்தே பர்வான் குருத்வாராவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. குருத்வாரா வாயிலுக்கு வெளியே குண்டு வெடித்ததில் குறைந்தது இரண்டு ஆப்கானியர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குருத்வாராவின் பாதுகாப்பு காவலாளியான அகமதுவை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காபூலில் உள்ள குருத்வாரா மீது தாக்குதல் … Read more

ஆப்கானிஸ்தான் : காபூல் மசூதி குண்டுவெடிப்பு – 50 பேர் பலி ..!

இஸ்லாமியர்களின் புனித மாதமான இந்த ரமலான் மாதத்தில் மசூதிகளில் தொடர்ச்சியாக தொழுகைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் தலைநகராகிய காபூல் பகுதியில் உள்ள கலிபா சாஹிப் மசூதியில் நேற்று தொழுகை நடை பெற்றுள்ளது. இந்த தொழுகையில் முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது அங்கிருந்த முஸ்லிம்களை குறிவைத்து சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. … Read more

#BigBreaking:காபூல் பள்ளியில் அடுத்தடுத்து 3 குண்டு வெடிப்பு – 6 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் கல்வி நிலையங்களை குறிவைத்து அடுத்தடுத்து 3 குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதாகவும், அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும்,மேலும் பல பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் மற்றும் நகரின் அவசர மருத்துவமனையின் தகவலின்படி,அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் காரணமாக பல குழந்தைகளை காயப்பட்டுள்ளனர் என்றும் அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் அஞ்சப்படுவதாக கூறப்படுகிறது. மேற்கு காபூலில் உள்ள அப்துல் ரஹீம் ஷாஹீத் உயர்நிலைப் பள்ளிக்கு அருகிலும்,காபூலின் தாஷ்ட்-இ-பார்ச்சி … Read more

#Breaking:காபூலில் இரட்டை குண்டு வெடிப்புகள்:19 பேர் பலி,50 பேர் படுகாயம் – தகவல்..!

காபூலில் இரண்டு குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 50 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள சர்தார் முகமது தாவுத் கான் ராணுவ மருத்துவமனை மற்றும் அதன் அருகே இன்று இரண்டு குண்டு வெடிப்பு வெடிச்சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சத்தமும் கேட்டதாகவும்,சாட்சியங்கள் சிலர் செய்தி ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும்,காபூலில் நிகழ்ந்த இரண்டு குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் … Read more

#Breaking:ஆப்கன் தலைநகர் காபூலில் மசூதி அருகே குண்டு வெடிப்பு;பொதுமக்கள் பலர் உயிரிழப்பு – தகவல் …!

காபூல் மசூதி அருகே குண்டுவெடிப்பு நிகழ்வில் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்து வரும் தலிபான்கள்,எல்லைகளுக்கு குறிப்பாக பதாக்ஷான் மாகாணத்தில் தற்கொலை படையை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதி செய்யும் வகையில்,தற்கொலை படைக்கு லஷ்கர்-இ-மன்சூரி (‘மன்சூர் இராணுவம்’) என்று பெயரிடப்பட்டு,நாட்டின் எல்லைகளுக்கு அனுப்பப்படும் என்று பதாக்ஷான் மாகாணத்தின் துணை ஆளுநர் முல்லா நிசார் அஹ்மத் அஹ்மதி முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில்,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஈத் காஹ் மசூதியின் … Read more

பஞ்ச்ஷிர் மாகாணம் எங்கள் வசம் – தலிபான்கள் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானின் கடைசி மாகாணமான பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்றியதாக தலிபான் அமைப்பினர் அறிவிப்பு.  ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருந்த தலைநகர் காபூலுக்கு வடக்கே உள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் நேற்று கைப்பற்றியதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். காபூலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வெற்றி கொண்டாடத்தில் ஈடுபட்டனர். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால், ஆப்கானிஸ்தான் முழுவதையும் நாங்கள் கைப்பற்றியுள்ளோம். பிரச்சனையாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர் மற்றும் பஞ்ச்ஷிர் இப்போது எங்கள் வசம் உள்ளது என்று தலிபான் தளபதி கூறினார். எதிர்க்கட்சிப் படைகளின் தலைவர்களில் ஒருவரான முன்னாள் துணைத் … Read more

#BREAKING: தலைநகர் காபூலில் மீண்டும் குண்டுவெடிப்பு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மீண்டும் குண்டுவெடிப்பு. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே உள்ள பகுதியில் மீண்டும் குண்டு வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 26ம் தேதி காபூல் விமான நிலைய வெளியே இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. காபூலில் மீண்டும் ஐஎஸ்ஐஸ்-கே தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபடலாம் என … Read more