ஆப்கானிஸ்தான்; காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு..18 பேர் காயம்!

காபூலில் மசூதிக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழப்பு.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்தும் மசூதிக்கு வெளியே பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 18 படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மசூதிக்கு அருகே ஒரு வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாஹ்ரியை காபூல் பாதுகாப்பு இல்லத்தின் பால்கனியில் கொல்லப்பட்டது. இதனை கண்டித்து, நேற்று, தலிபான்களால் ஒழுங்கமைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் பல மாகாணங்களில் பேரணி நடத்தினர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, கொராசன் மாகாணத்தில் இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் IS இன் பிராந்திய துணை அமைப்பு, நாடு முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நடத்தி வருகிறது. அந்நாட்டில் அவ்வப்போது குண்டுவெடிப்பு, தற்கொலைப்படை பயங்கரவாத தாக்குதல்களும் அரங்கேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment