ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ரூ.498 கோடி பாக்கி!

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று மாநிலங்களவையில் கூறியதாவது, கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி, பல்வேறு மாநில அரசு மற்றும் மத்திய அரசு  ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ .498.17 கோடி பாக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

மொத்தம் வி.வி.ஐ.பி பயணத்திற்கு 84.57 கோடி ரூபாயும், வெளிநாட்டில் சிக்கியவர்கள் மீட்பு பயணத்திற்கு 61 12.61 கோடியும், நிவாரண நடவடிக்கைகளுக்கு 9.67 கோடி ரூபாயும், நிலுவைத் தொகையாக 391.32 கோடி ரூபாயும் உள்ளது என்று அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். 2018-19 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் 8,556.35 கோடி ரூபாய் இழப்பையும், 2019-20ல் ரூ.7,982.83 கோடி இழப்பையும் சந்தித்ததாக அவர் கூறினார்.

இந்த நிதியாண்டில் ஏர் இந்தியா சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் இழக்கும் என்று கூறப்படுகிறது.

author avatar
murugan