ஆகஸ்ட் 20 முதல்  24 கூடுதல் உள்நாட்டு விமானங்களை ஏர் இந்தியா இயக்க உள்ளது..

இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, வரும் ஆகஸ்ட் 20 முதல் டெல்லி – மும்பை, மும்பை – பெங்களூரு, மும்பை – அகமதாபாத், மும்பை – சென்னை, மும்பை – ஹைதராபாத் மற்றும்  அகமதாபாத்-புனே ஆகிய வழித்தடங்களில் 24 கூடுதல் உள்நாட்டு விமானங்களை ஏர் இந்தியா இயக்கவுள்ளது.

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட டிக்கெட் விலைகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தநிலையில், ஏர் இந்தியாவின் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

டிக்கெட் விலைகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு, ஏர் இந்தியா, விஸ்தாரா, ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் கோ ஃபர்ஸ்ட் உள்ளிட்ட இந்திய விமான நிறுவனங்கள் தங்களுடைய டிக்கெட்டுகளின் விலையை இனி தங்களாவே எவ்வித கட்டுப்பாடுமின்றி நிர்ணயிக்க முடியும்.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment