"Me Too"சிக்கிய BJP அமைச்சர் ஏழு பெண்கள் புகார்…!!

பத்திரிகை துறையில் வேலை செய்துவரும்  ஏழு பெண்களின் கடுமையான பாலியல் வன்குற்ற புகாருக்கு உள்ளாகியிருக்கும் வெளியுறவு துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் உடனடியாக பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என குரல் வலுத்துள்ளது. ஏசியன் ஏஜ் உள்பட பல்வேறு பத்திரிகைகளில் முதன்மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பொறுப்புகளில் பணியாற்றியவர் எம்.ஜே.அக்பர். இவர் பத்திரிகை பணியை கைவிட்டு பாஜகவில் இணைந்து செயல்பட்டார். தமது அமைச்சரவையில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவரின் முகம் வேண்டும் என்பதால் எம்.ஜே.அக்பரை, பிரதமர் மோடி வெளி யுறவுத்துறை இணை … Read more

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாதர் சங்கத்தினர்…!!

தூத்துக்குடி மாநகர் 48 வார்டுஇந்திரா நகர் பகுதி மக்களுக்கு மூன்று ஆண்டுகாலமாக இலவசவேட்டி சேலை வழங்காததை கண்டித்தும் புழுங்கல்அரிக்கு பதிலாக பச்சை அரிசி வழங்குவதை கண்டித்தும் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநகர துணைதலைவர் காந்திமதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.பூமயில் மாவட்டதுணைத் தலைவர் மு கமலம், மாநகரதலைவர் காளியம்மாள், உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது கோரிக்கை களை உடணடியாக நிறைவேற்ற உறுதியளித்தார்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, மாதர் சங்கத்தின் சார்பில் போராட்டம்…!!

கோவை :  அரசுக்கு எதிராக வாக்குகள் பெறும் இயக்கம் தொடங்கியுள்ளனர். கோவை அரசு மருத்துவமனையின் முன்பு நியாயம் மற்றும் அநியாயம் என இரண்டு பெட்டிகளில் வாக்கு பெட்டி, வாக்கு சீட்டுகளுடன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கோவை மாவட்ட குழுசார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. திரளாக மக்கள் பஸ் கட்டண உயர் வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர்.

நிரந்தர வேலை மற்றும் நியாமான ஊதியம் கேட்டு போராடும் மாதர் சங்கம் ,அரசியல் தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு…!

சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கிற செவிலியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து DMS வளாகத்திற்குள் சென்ற மாதர் சங்கத்தின் தலைவர்களை சந்திக்க விடாமல் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது காவல்துறை.போராடுபவர்கள் அனைவரும் இன்று உணவருந்தவில்லை. உண்ணாவிரதமில்லை. உணவு எடுத்துக் கொண்டால் காலை கடன் கழிக்க எங்கே போவது? என்ற அச்சத்தோடு ஒவ்வொரு நேரத்தையும் கடத்தி கொன்றிருக்கிறார்கள் என அவர்களை சந்தித்து விட்டு வெளியே வந்த அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA) மாநில செயலாளர்  பி.சுகந்தி வருத்ததோடு தெரிவித்தார் .மேலும் அவர்களோடு ஆதரவு … Read more

சிபி-சிஐடி விசாரணை அறிக்கையை கொளுத்தி மாதர் சங்கம் மற்றும் மாற்று திறனாளி சங்கம் போராட்டம்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 2014 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று காதுகேளாத வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை சில சமூக விரோதிகள் கூட்டு பாலியல் வல்லுறவு செய்தனர். ஆளும் அதிமுக-வின் செல்வாக்கோடு செயல்படும் இந்த சமூகவிரோத குற்றவாளிகளில் அந்த ஊராட்சியின் வார்டு கவுன்சிலரான சித்தலிங்கா என்பவரும் அடக்கம். இந்த வழக்கில் ஆரம்பம் முதல் குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் உள்ளூர் ஊர்தலைவர்கள், காவல்துறை, மருத்துவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டது. சுமார் ஒருவார … Read more

தூத்துக்குடியில் சாலை வசதி கேட்டு வாலிபர் மற்றும் மாதர் சங்கம் சார்பில் நாற்று நடும் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள விட்டிலாபுரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான விட்டிலாபுரம் மணக்கரை சாலை உள்ளது. இந்த சாலை 3 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இந்த சாலை வழியாக முத்தாலங்குறிச்சி, இந்திரா நகர், ஆழிகுடி,பொந்தன்பொழி உள்பட பல கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளது. முத்தாலங்குறிச்சியில் உள்ள சுமார் 5 செங்கல்தொழில்சாலைக்கு இந்த வழியாகத்தான் தினமும் 100க்கு மேற்பட்ட லாரிகள் சென்று வருகிறது. தினமும் டவுன் பஸ் 16 சுற்றுகளும், சுமார் 20 … Read more

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் !

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலில் விவசாய தொழிலாளர் சங்கமும், மாதர் சங்கமும் இணைந்து ரேஷன், நகர்ப்புற வேலை வாய்ப்பு, நல திட்ட அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க  கோரி பெரும் திரள் மனு கொடுக்கும் போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. இதில்  சுமார் 3000 பேர்க்கு மேல்  கலந்துகொண்டனர்.