பாதுகாப்பு கோரி பாஜக சார்பில் டிஜிபியிடம் மனு…!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் பாஜக முக்கிய நிர்வாகிகள் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கோரிக்கை மனு தமிழகத்தில் என்.ஐ.ஏ சோதனையை அடுத்து, கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச்சொத்துக்கள் சேதம் என தொடர்ந்து பதற்றமான நிலை காணப்படுகிறது. இதனால் கோவை முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், அதிரடி படையினர், கமாண்டோ படையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, தலைமை  இறையன்பு  அவர்கள், காணொளி மூலம் தலைமை செயலகத்தில் இருந்து, … Read more

டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்பட அனைத்து அதிகாரிகள், காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்து குறிப்பு எழுதிய முதல்வர்..!

டிஜிபி அலுவலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்பட அனைத்து அதிகாரிகள், காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்து குறிப்பு எழுதியுள்ளார். சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில், உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் டிஜிபி அலுவலகத்தில் காவல்துறையினிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றார். அதன் பின் அலுவலகத்தில், மகிழம் மரக்கன்றை நட்டார். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்பட அனைத்து அதிகாரிகள், காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்து குறிப்பு எழுதியுள்ளார். அந்த … Read more

புகார் தர வருவோரை கேலி செய்ய கூடாது.. கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.! டிஜிபி சுற்றறிக்கை.!

காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருவோரை கனிவுடன் நடத்த வேண்டும். அவர்களை கேலி செய்ய கூடாது என சில அறிவுறுத்தல்களை டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை மூலம் காவலர்களுக்கு அனுப்பியுள்ளார்.   காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருவோரை சரிவர நடத்துவதில்லை அவர்கள் தாங்களை தான் பெரிய அதிகாரிகள் என சிலர் நினைத்து செயல்படுகின்றனர் என்ற புகார்கள் அவ்வப்போது எழுவது உண்டு. தற்போது அது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு ஓர் அறிக்கை ஒன்றை அனைத்து காவலர்களுக்கும் அனுப்பி உள்ளார். … Read more

இணையத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை.! முழுவீச்சில் களமிறங்கிய சமூக ஊடக குழு.!

இணையம் வாயிலாக பரப்பப்படும் பொய்யான வதந்திகள், குற்ற சம்பவங்களை தடுக்க சமூக ஊடக குழு உருவாக்கப்பட்டுள்ளது. என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.  சமூக வலைதளத்தில் வதந்திகள் பரப்புவது மற்றும் தனிநபர் தாக்குதல் தற்போது அதிகரித்து உள்ளன. அவற்றை தடுக்கவே தற்போது காவல்துறை சார்பில் மாநகர, மாவட்ட அளவில் சமூக ஊடக குழு என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் மூலம் சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்பட்டு உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரவுவதை இதன் மூலம் தடுக்கப்படும்.மேலும், … Read more

சமூக ஊடக குற்றங்களை தடுக்க காவல்துறையில் “சமூக ஊடகக் குழுக்கள்”அமைப்பு..! – டிஜிபி

சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோரை கண்டுபிடிக்க காவல்துறையில் “சமூக ஊடகக் குழுக்கள்”  அமைப்பு.  சமூக ஊடக குற்றங்களை தடுக்க  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.இருப்பினும், நாளுக்கு நாள் சமூக ஊடக குற்றங்கள் நடந்த வண்ணம் தான் உள்ளது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோரை கண்டுபிடிக்க காவல்துறையில் “சமூக ஊடகக் குழுக்கள்”  அமைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை உட்பட 9 மாநகரங்களிலும், 37 மாவட்டங்களிலும் சைபர்கிரைம் தொழில்நுட்பம் அறிந்த சமூக ஊடக குழுக்கள் உருவாக்கபட்டுள்ளதாகவும் தமிழக டிஜிபி சைலேந்திர … Read more

காவல்துறை அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட வாகனங்களில் இதை பயன்படுத்தக்கூடாது – டிஜிபி அதிரடி உத்தரவு

காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தக்கூடிய வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை  பயன்படுத்தக் கூடாது என்று டிஜிபி அறிவுறுத்தல். பொதுவாக காவல்துறை அதிகாரிகள் தங்கள் தனிப்பட்ட ரீதியாக பயன்படுத்தும் வாகனங்களில் போலீஸ் என்ற ஸ்டிக்கரை ஒட்டி இருப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது என்றும், போலீஸ் என்ற போர்ட் மற்றும் ஸ்டிக்கரை காவலர்கள் … Read more

உஷார்…”இந்த APP வைத்திருந்தால் உடனே நீக்கி விடுங்கள்” – டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

தமிழகத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் ஆன்லைன் லோன் ஆப் வைத்திருந்தால் அதனை உடனே நீக்கி(delete) விடுமாறு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில் டிஜிபி அவர்கள் கூறியதாவது: “ஆன்லைன் முறைகேடு பற்றி சமீபகாலமாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.குறிப்பாக,ஆன்லைனில் லோன் வாங்குவதற்கான லோன் ஆப்கள்(loan app) நிறைய வந்துள்ளன.அந்த லோன் ஆப்களை நீங்கள் பதிவிறக்கம் செய்தவுடன் உங்களை லோன் அப்ளை செய்ய கொள்வார்கள்.அப்போது உங்கள் புகைப்படம் மற்றும் … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தலைமை செயலகத்தில், காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தலைமை செயலகத்தில், காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், சி.பி.சி.ஐ.டி. டிஜிபி ஷகில் அக்தர், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். விக்னேஷ் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் 9 போலீசாரிடம் நடைபெற்று வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#Breaking:இரவில் விசாரணை நடத்தக்கூடாது – டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் வழக்குகளில் கைதாகும் நபர்களிடம் காவல் நிலையங்களில் வைத்து இரவு நேரத்தில் விசாரணை நடத்தக்கூடாது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவில் அவர் கூறியதாவது: “தமிழகத்தில் பகலில் கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும்.குறிப்பாக,காவல்நிலையங்களில் கைதிகளிடம் இரவில் விசாரணை நடத்தக் கூடாது”,என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் விசாரணைக் கைதிகள் இருவர் உயிரிழந்த விவகாரம் சர்ச்சை பெரும் ஆன நிலையில்,தற்போது டிஜிபி … Read more

‘இது முதன்முறை அல்ல’- தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு கடிதம் எழுதிய ஜோதிமணி எம்.பி..!

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சைலேந்திர பாபு அவர்களுக்கு, ஜோதிமணி எம்.பி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.  பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் கொடுக்க சென்ற கரூர் மாணவியின் உறவினர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து சித்ரவதை செய்த காவல் ஆய்வாளரை கைது செய்யக் கோரி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சைலேந்திர பாபு அவர்களுக்கு, ஜோதிமணி எம்.பி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி … Read more