நாளை மறுநாள் காணொளி மூலம் பிரசாரத்தை துவங்கும் மோடி..!

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியான பாஜகவுக்கான  பிரசாரத்தை காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள்  உரையாற்றுகிறார். உத்தரபிரதேசம்,  பஞ்சாப் , உத்தரகாண்ட் , மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் … Read more

பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை..! ராகுல் காந்தி எம்.பி ட்வீட்..!

பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை என ராகுல்காந்தி எம்.பி ட்வீட். ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உரையாற்றி வந்த நிலையில், இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும் காணொலி வாயிலாக உரையாற்றினார். இந்நிலையில், பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த, டெலிபிராம்ப்டர் இயந்திரம் தொழில்நுட்ப கோளாறால் நின்றது. இதனையடுத்து, மோடி சில நிமிடங்கள் பேசாமல் அப்படியே நின்றார்.  … Read more

பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்…!

எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து போற்றியமைக்கு பிரதமர் மோடிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். அஇஅதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு புரட்சித்தலைவர் “பாரத ரத்னா”  எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து போற்றியமைக்கு பிரதமர் மோடிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், ”ஒரு செயலை செய்து முடிக்க எண்ணுபவர், மிக உறுதியுடன் இருந்தால் அவர் நினைத்தபடியே அந்தச் செயலைச் செய்து முடிப்பார்’ … Read more

பிரதமர் மோடி மிகவும் திமிர் பிடித்தவர் – ஆளுநர் சத்ய பால் மாலிக்..!

500 விவசாயிகள் எனக்காகவா இறந்தார்கள்..? என பிரதமர் கேட்டதாக மேகலாய ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் தாத்ரியில் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய மேகலாய ஆளுநர் சத்தியபால் மாலிக், விவசாயிகள் பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்தித்தபோது ​​ஐந்து நிமிடங்களில் அவருடன் சண்டையிட்டேன் என கூறினார். அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்ததாகவும், அப்போது விவசாய சட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க சென்றபோது அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு 5 நிமிடங்களில் … Read more

மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.!

மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இன்று மதியம் 1 மணியளவில் மீரட்டில் நவீன மற்றும் சிறந்த விளையாட்டு உள்கட்டமைப்புகளுடன் கூடிய மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த பல்கலைக்கழகம் இரண்டரை வருடங்களில் கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, மீரட்டின் சர்தானா நகரின் சல்வா மற்றும் காளி கிராமங்களில் சுமார் 700 கோடி மதிப்பீட்டில் பல்கலைக்கழகம் … Read more

#BREAKING: ஜனவரி 3-ஆம் தேதி முதல் 15- 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு – பிரதமர் அறிவிப்பு ..!

ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15- 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். சற்று நேரத்திற்கு முன் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து பிரதமர் தனது உரையை தொடங்கினார். உலகின் பல நாடுகளில் ஓமைக்ரான் பரவி வருகிறது. இந்தியாவில் பலருக்கும் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முக கவசம் அணிவது, கைகளை அவ்வப்போது கழுவுவதை மறந்துவிடக்கூடாது ஓமைக்ரான் பரவலைக் கண்டு மக்கள் … Read more

#BREAKING : ஓமைக்ரான் தொற்று அதிகரிப்பு – பிரதமர் மோடி ஆலோசனை..!

ஓமைக்ரான் பரவலை தொடர்ந்து, பிரதமர் மோடி அவர்கள் ஓமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை. ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா தொற்று தற்போது பரவி வரும் நிலையில், முதலில் இந்த தொற்றானது தென்னாப்பிரிக்காவில் தான் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அனைத்து நாடுகளிலும் இந்த தொற்று பரவி வரும் நிலையில், இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு 300-ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில் ஓமைக்ரான் பரவலை தொடர்ந்து, பிரதமர் மோடி … Read more

இது ஜனநாயகத்தின் துரதிஷ்டவசமான படுகொலையாகும் – ராகுல் காந்தி

அமளிக்கு மத்தியில், தொடர்ந்து வரிசையாக மசோதா நிறைவேற்றப்படுகின்றன இது நாடாளுமன்றத்தை நடத்த முறை இல்லை என ராகுல் காந்தி பேட்டி. டெல்லியில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டமானது டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  கடந்த சில நாட்களுக்கு கூட்டத் தொடரில், அமளியில் ஈடுபட்டதாக கூறி எதிர்க்கட்சியை 12 எம்.பி-க்களை மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்தனர். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இன்று இந்த செயலை கண்டித்து ராகுல் … Read more

#BREAKING: பிபின் ராவத் உட்பட ராணுவ அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி இன்றிரவு அஞ்சலி..!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி இரவு 9 மணியளவில் அஞ்சலி செலுத்தவுள்ளார். நேற்று பிற்பகல் குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட13 பேர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்தது.  இதைத்தொடர்ந்து, இன்று காலை வெலிங்டனில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதனை … Read more

பிபின் ராவத் சிறப்பான சேவையை இந்தியா என்றும் மறக்காது – பிரதமர் மோடி

முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் குடியறது தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர். ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர்.  இந்த விபத்தில் … Read more