பிரதமர் மோடி மிகவும் திமிர் பிடித்தவர் – ஆளுநர் சத்ய பால் மாலிக்..!

500 விவசாயிகள் எனக்காகவா இறந்தார்கள்..? என பிரதமர் கேட்டதாக மேகலாய ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் தாத்ரியில் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய மேகலாய ஆளுநர் சத்தியபால் மாலிக், விவசாயிகள் பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்தித்தபோது ​​ஐந்து நிமிடங்களில் அவருடன் சண்டையிட்டேன் என கூறினார். அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்ததாகவும், அப்போது விவசாய சட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க சென்றபோது அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு 5 நிமிடங்களில் சண்டையிட்டதாக கூறினார்.

பிரதமர் மோடி மிகவும் திமிர் பிடித்தவர். நான் அவரிடம் நம்முடைய 500 விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள் என்று கூறினேன். அதற்கு மோடி அவர்கள் அனைவரும் எனக்காகவா இறந்தார்கள்..? என்றார். நீங்கள் தான் இந்தியாவின் பிரதமர் எனக் கூறினேன். பின்னர் பிரதமர் அமித் ஷாவை சந்திக்குமாறு என்னிடம் கூறினார். நான் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அவர் ஏதோ பேசிவிட்டார் விடுங்கள் என அமித்ஷா கூறியதாக சத்தியபால் மாலிக் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் சத்ய பால் மாலிக், மூன்று விவசாயச் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தது விவசாயிகளுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற மத்திய அரசு நேர்மையாக செயல்பட வேண்டும். பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும் கூறினார்.

தானும் இந்த விவசாய சட்டங்களுக்கு எதிரானவன். விவசாயிகள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அநீதி இழைக்கப்பட்டால் மீண்டும் தொடங்கும் என்றும் மாலிக் கூறினார். விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர் என்று மாலிக் கூறினார்.

எதிர்காலத்திலும் விவசாயிகளுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையையும் எந்த அரசு எடுத்தாலும் அதை உண்மையாக எதிர்ப்போம் என்றும், பதவியை ராஜினாமா செய்ய சொன்னாலும் பின்வாங்கப் போவதில்லை என்றும் கூறினார். என் பதவிக்கும் முன் விவசாயிகளின் நலன்தான் எனக்கு முக்கியம். விவசாயிகள் தொடர்பான சட்டத்தை அரசு இயற்றும் போது முதலில் விவசாயிகளின் கருத்தையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

எந்தச் சட்டம் இயற்ற வேண்டும் என்றால் அது விவசாயிகளின் நலனுக்காகவும் உருவாக்கப்பட வேண்டும் என்று மாலிக் கூறினார். சில காலமாக அவர் பாஜக அரசாங்கத்தின் மீது தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார். அவர் மேகாலயாவுக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு ஜம்மு காஷ்மீர் மற்றும் கோவாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan