#BREAKING : ஓமைக்ரான் தொற்று அதிகரிப்பு – பிரதமர் மோடி ஆலோசனை..!

ஓமைக்ரான் பரவலை தொடர்ந்து, பிரதமர் மோடி அவர்கள் ஓமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா தொற்று தற்போது பரவி வரும் நிலையில், முதலில் இந்த தொற்றானது தென்னாப்பிரிக்காவில் தான் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அனைத்து நாடுகளிலும் இந்த தொற்று பரவி வரும் நிலையில், இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு 300-ஐ நெருங்கியுள்ளது.

இந்நிலையில் ஓமைக்ரான் பரவலை தொடர்ந்து, பிரதமர் மோடி அவர்கள் ஓமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்துவது, தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும்,  பண்டிகை காலத்தை முன்னிட்டு  தொற்று பரவல் அதிகரிக்காமல் இருக்க கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றியும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.