இது ஜனநாயகத்தின் துரதிஷ்டவசமான படுகொலையாகும் – ராகுல் காந்தி

அமளிக்கு மத்தியில், தொடர்ந்து வரிசையாக மசோதா நிறைவேற்றப்படுகின்றன இது நாடாளுமன்றத்தை நடத்த முறை இல்லை என ராகுல் காந்தி பேட்டி.

டெல்லியில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டமானது டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  கடந்த சில நாட்களுக்கு கூட்டத் தொடரில், அமளியில் ஈடுபட்டதாக கூறி எதிர்க்கட்சியை 12 எம்.பி-க்களை மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்தனர். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இன்று இந்த செயலை கண்டித்து ராகுல் காந்தி மற்றும் பல தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியில் ஈடுபட்டனர்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது இந்திய மக்களின் குரல் நசுக்கப்படுவதற்கு அடையாளமாகும். எம்பிக்களின் குரல் நசுக்கப்படுகிறது. அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் முக்கியமான பிரச்சினைகளை விவாதிக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. அமளிக்கு மத்தியில், தொடர்ந்து வரிசையாக மசோதா நிறைவேற்றப்படுகின்றன இது நாடாளுமன்றத்தை நடத்த முறை இல்லை.  இது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டவசமான படுகொலை ஆகும் என்றும், பிரதமர் மோடி  அவைகளுக்கு வருவதில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.