#HelicopterCrash : ஹெலிகாப்டர் விபத்து – இன்று மாலை பிரதமர் மோடி அவசர ஆலோசனை..!

பாதுகாப்பிற்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட14 பேர் பயணித்துள்ளனர். இதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பிற்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் … Read more

உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் அல்லது மாற்றங்களுக்கு தயாராகுங்கள் – பிரதமர் மோடி!

உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் அல்லது மாற்றங்களுக்கு தயாராகுங்கள் என பிரதமர் மோடி கட்சி எம்.பிக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லியில் உள்ள அம்பேத்கார் சர்வதேச மையத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், பாஜக உறுப்பினர்கள் தாங்களாகவே மாறிக் கொள்ளுங்கள் அல்லது காலப்போக்கில் வரும் மாற்றத்திற்கு தயாராகுங்கள் என கூறியுள்ளார். ஏனென்றால், பாஜக உறுப்பினர்களின் வருகை பதிவு மிக மோசமாக இருப்பதாகவும் இந்த பிரச்சனை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. … Read more

எத்தனை முறைதான் பிரதமர் மன்னிப்பு கேட்பார்? – ராகுல் காந்தி

விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறாதது எல்லாம் மிகப்பெரிய தவறுகள். எத்தனை முறைதான் பிரதமர் மன்னிப்பு கேட்பார்? காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் விவாதமின்றி ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். விவசாயிகளின் போராட்டம் குறித்து தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், தற்போது … Read more

டெல்லியில் பாஜக எம்.பி-க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், டெல்லியில் பாஜக எம்.பி-க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். டெல்லியில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டமானது டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கோட்டம் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், டெல்லியில் பாஜக எம்.பி-க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு, நாடாளுமன்றத்தை முடக்கி வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

சட்டங்கள் என்பது மேகி உணவு அல்ல – மாணிக்கம் தாகூர்

வேளாண் சட்டங்களை விவாதங்களின்றி திரும்ப பெற்றது சர்வாதிகார போக்கை காட்டுவதாக மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.  டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி,நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் 26 மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தது. இதனையடுத்து, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், 3 வேளாண் … Read more

எப்போதும் மீனவ சமுதாயத்திற்காக இருக்கும் அரசு நம்முடைய மோடி அவர்கள் அரசு! – அண்ணாமலை

எப்போதும் மீனவ சமுதாயத்திற்காக இருக்கும் அரசு நம்முடைய மோடி அவர்கள் அரசு என அண்ணாமலை ட்வீட். கடந்த அக்.23-ஆம் தேதி நாகப்பட்டணம் அக்கரைப்பேட்டை சார்ந்த 23 மீனவர்கள்  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை தமிழக வந்தடைந்தனர். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாகப்பட்டணம் அக்கரைப்பேட்டை சார்ந்த நம்முடைய 23 மீனவ சகோதரர்கள், இலங்கை கடற்படையால் Oct 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்கள். நம்முடைய மத்திய … Read more

அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆர்.எஸ்.எஸ்-ன் கட்டுப்பாட்டில் உள்ளதா? – சீமான்

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் பிரதமர் மோடியின் மதம்சார்ந்த நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்ய யார் அனுமதித்தது? உத்தரகாண்டின் கேதர்நாத்தில் நடைபெற்ற மத நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும், ஆதிசங்கரர் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றியதையும் தமிழகத்திலுள்ள சில கோயில்களில் ஒளிபரப்பப்பட்டது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘உத்தரகாண்டின் கேதர்நாத்தில் நடைபெற்ற மத நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும், ஆதிசங்கரர் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றியதையும் தமிழகத்திலுள்ள … Read more

பிரதமர் மோடி அவர்களே..! நீங்கள் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – திருமாவளவன்

மீண்டும் மோடி பிரதமரானால், இந்திய தேசத்தை காப்பாற்ற இயலாது. இது மிகப்பெரிய எச்சரிக்கை. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நவம்பர்08-தேசியப் பொருளாதார பேரிடர் நாள். பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் பிரதமர் மோடி அவர்கள் நாட்டின் பொருளாதார நிலைமையை நிலைகுலைய வைத்த நாள். பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றியதாக, … Read more

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு..! பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்…!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு பிரதமருக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி இன்று முதல் ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு  அறிவித்தது. அதன்படி, இந்த அறிவிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இந்த விலை குறைப்பு வாகனஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், பெட்ரோல் மற்றும் … Read more

ஒற்றுமையாக இருந்தால்தான் முன்னேற முடியும்- பிரதமர் மோடி..!

கடந்த 7 ஆண்டுகளில் நாட்டிற்கு தேவையில்லாத சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன என்று மோடி தெரிவித்துள்ளார். தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு பிரதமர் ஆற்றிய உரையில் நாட்டிற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த சர்தார் வல்லபாய் படேலுக்கு நாடு அஞ்சலி செலுத்துகிறது. வரலாற்றில் மட்டும் சர்தார் படேல் வாழவில்லை. இந்தியர்களின் மனங்களில் வாழ்கிறார். நம் ஒற்றுமையை இருந்தால்தான் முன்னேற முடியும். நமது இலக்குகளை அடைய முடியும். இந்திய வலிமையாகவும், வளர்ச்சியுடனும் இருக்க சர்தார் வல்லபாய் படேல் விரும்பினார். நாட்டின் நலனுக்கு எப்போதும் முக்கியத்துவம் … Read more