எத்தனை முறைதான் பிரதமர் மன்னிப்பு கேட்பார்? – ராகுல் காந்தி

விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறாதது எல்லாம் மிகப்பெரிய தவறுகள். எத்தனை முறைதான் பிரதமர் மன்னிப்பு கேட்பார்?

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் விவாதமின்றி ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

விவசாயிகளின் போராட்டம் குறித்து தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், தற்போது ‘சத்தியாகிரகத்தால் உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்காதது, வேலைவாய்ப்பு வழங்காதது, விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறாதது எல்லாம் மிகப்பெரிய தவறுகள். எத்தனை முறைதான் பிரதமர் மன்னிப்பு கேட்பார்?’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.