மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைப்பு- தமிழக அரசு

திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகின்றன என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் … Read more

அனைத்து பல்.கழகங்களும் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் – உயர்கல்வித்துறை உத்தரவு!

பல்கலைக்கழக பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அனைத்து பல்.கழக பதிவாளர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவு. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக அனைத்து கல்லூரிகள்,பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனவரி 20 வரை விடுமுறை வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள்,தங்கள் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,பாடத்திட்டத்தை மாற்றியமைத்த பின்னர்,தமிழ்,புள்ளியியல்,கணித பாடங்களை மட்டும் ஆய்வு பணிகளுக்காக அரசுக்கு அனுப்பலாம் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

#Breaking:ஒரு யூனிட் மணலின் விலை ரூ.1000 – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

ஒரு யூனிட் ஆற்று மணலின் விலையை ரூ.1000 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள்,ஏழை,எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமும் இன்றி மணலை எடுத்துச் செல்லும் வகையில்,தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று அறிக்கை வெளியிட்டார்.அதில்,”பொதுமக்கள்,ஏழை எளியோர் புதிதாக வீடுகட்டுதல், பழுதுபார்த்தல் கட்டடமற்ற எவ்வித இதரபணிகளை மற்றும் எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு,இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்காக எளிமையான புதிய வழிமுறைகளை செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் … Read more

நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்கு ரூ.150 கோடி மானியத்தொகை – தமிழக அரசு உத்தரவு!

சென்னை:கூட்டுறவு சங்கங்களின் கீழ் நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்காக ரூ.150 கோடி மானியத்தொகை விடுவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கு 2020-2021 ஆம் ஆண்டிற்கான முன்கூட்டிய மானியமாக ரூ.150 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,பொது விநியோக முறை கூட்டுறவு சங்கங்களின்கீழ் நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கு ஏற்படும் நஷ்டத்திற்காக 2020-2021 ஆம் ஆண்டிற்கான ரூ.150 கோடி மானியத்தை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. … Read more

முதல்வர் பதிலுரை…தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று பதிலுரை அளிக்கவுள்ள நிலையில்,தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு. நடப்பு ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்றது.இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு,தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழக சட்டப்பேரவை  கூட்டத்தொடர் 2 நாட்களுக்கு மட்டுமே நடைபெறும் என்றும், சட்டப்பேரவையில் கேள்வி நேரம்,முதலமைச்சர் பதிலுரை நேரலை செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இதனைத் … Read more

#BREAKING : கோயில்களை செம்மைப்படுத்த முதல்வர் தலைமையில் ஆலோசனை குழு அமைத்து அரசாணை வெளியீடு..!

அனைத்து இந்து கோயில்களிலும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தவும், கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை குழு அமைத்து தமிழக அரசு அரசாணை. இந்து சமய அறநிலையத் துறையில், அனைத்து இந்து கோயில்களிலும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தவும், கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, உயர்நிலைக் குழுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைவராகவும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் துணைத் தலைவராகவும் நியமனம் … Read more

இன்று முதல்….3 நாட்கள் இங்கு செல்ல அனுமதி இல்லை – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வார இறுதி நாட்களான இன்று,மற்றும் சனி,ஞாயிறு (ஜனவரி 7,8,9)ஆகிய கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். … Read more

#Breaking:”பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம்” – முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

சென்னை:பல்கலைக்கழக துணை வேந்தர்களை இனி தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.அந்த வகையில், சட்டப்பேரவையில் இன்று கேள்வி – பதில் நேரம் நடைபெற்று வருகிறது. அதன்படி,கேள்வி நேரத்தின்போது,பல்கலைக் கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேரவையில் தெரிவித்திருந்தார். இதற்கு,பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி … Read more

#Breaking:முழு ஊரடங்கில் இவர்களுக்கு தடை இல்லை – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளை எழுதச் செல்வோர்களுக்கு எந்த தடையும் இல்லை எனவும்,அவர்கள் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்குவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும்,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் … Read more

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களுக்கு நிரந்தர தடை வேண்டும் – சீமான்

இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்ய தமிழ்நாடு அரசு வலுவான தடைச்சட்டம் இயற்ற வேண்டும் என சீமான் வலியுறுத்தல். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், குடும்பங்களைச் சீரழிக்கும் இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்ய தமிழ்நாடு அரசு வலுவான தடைச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் மீண்டும், இணையவழி தாட்சி அமப்புலிகள் அதிகரித்து வருவது மிகுந்த அதிர்ச்சியும், வேதனையையும் அளிக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் இணையவழி … Read more