நிரவ் மோடிக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் முடக்கம்.!

நிரவ் மோடியின் வாங்கி மோசடி தொடர்பாக அவரது சொத்துக்களை முடக்கி வரும் அமலாக்க துறையினர், தற்போது சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைந்துள்ள 134 ஏக்கர் நிலத்தையும் முடக்கியுள்ளனர்.மேலும் பல்வேறு சொத்துக்களை முடக்கப்போவதகவும் தகவல்கள் உள்ளன.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சட்டவிரோதமான பணபரிவர்தனையின் மூலம் ரூ.11ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஊழல் செய்த குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி(47) மீது, கடந்த ஆண்டு நடந்த ரூ.280 கோடி மோசடி தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இவ்வழக்கு தொடர்பாக வங்கி அதிகாரிகள், தொழிலதிபர்கள் உட்பட 16 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும், மோடிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டு ரூ.523.72 கோடி மதிப்பிலான 21 அசையா சொத்துக்களையும் முடக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைந்துள்ள 134 ஏக்கர் நிலத்தையும் அமலாக்கத்துறை முடக்கி அதிரடி நடவடிக்கை  மேற்கொண்டுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment