சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் – இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கிறார்.  புதிய வகை வைரஸான ஓமைக்ரான் வைரஸ், உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை தடுக்க ஒவ்வொரு நாடுகளிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் பாதிப்பை தடுக்கும் வண்ணம் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த … Read more

இன்று முதல்…9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறாத போதும்,கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் (3-ஆம் தேதி) தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனிடையே கொரோனா … Read more

#BREAKING: பொங்கல் தொகுப்பு – 12 கூடுதல் பதிவாளர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு!

பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தை கண்காணிக்க கூடுதல் பதிவாளர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு. 2022-ம் ஆண்டு தமிழர் திருநாளான தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பொங்கல் தொகுப்பை 2 கோடியே 15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் வழங்க அரசு … Read more

#BREAKING: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் ஒரே நாளில் 1,594 பேருக்கு உறுதி!

தமிழகத்தில் ஒரே நாளில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத்துறை தகவல். தமிழகத்தில் ஒரே நாளில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 1,489 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 1,594 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,02,237 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இரு நாள் கொரோனா பாதிப்பு 1,594 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 776 பேருக்கு கொரோனா … Read more

புதிய குடியிருப்புகளுக்கான ஆணையை வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

வீடுகளை இழந்த 28 குடும்பங்களில் 17 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்புகளுக்கான ஆணையை வழங்கினார் அமைச்சர். சென்னையின் திருவொற்றியூரில் அரிவாகுளத்து பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பு கட்டடம் திடீரென டிச.27-ஆம் தேதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால், அங்கு D பிளாக் குடியிருப்பில் இருந்த 24 வீடுகள் தரைமட்டமாகின. கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், மக்கள் விபத்துக்கு முன்தினம் இரவே வெளியேறியதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனைத்தொடர்ந்து, இடிந்த குடியிருப்புக்கு பதிலாக மாற்று வீடுகள் விரைவில் … Read more

பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு – அண்ணா பல்கலைக்கழகம்!

2021-22ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம். UG & PG பொறியியல் படிப்புகளில் தொடக்கம் முதல் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பிரிவு வாரியாக முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் & சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. வழக்கம் போல் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களே அதிகளவில் தரவரிசையில் இடம்பிடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் செயல்படும் – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறாத போதும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி டிச.27-ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அடுத்த இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் நாளை 3-ஆம் தேதி … Read more

தமிழகத்துக்கு வருவதும் இல்லை, தருவதும் இல்லை – சு.வெங்கடேசன் எம்.பி

தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி, குஜராத்துக்கு ஒரு நீதியா? என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி. இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்துக்கு வருவதும் இல்லை, தருவதும் இல்லை. குஜராத்தில் புயல் என்றால் நேரில் சென்று 1000 கோடி அறிவிக்கிறார் பிரதமர். தமிழ்நாடு பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எட்டிப் பார்க்காதது ஏன் தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி, குஜராத்துக்கு ஒரு நீதியா? என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்துக்கு வருவதும் … Read more

மக்களுக்கு பயம் போய்விட்டது.. சென்னையில் 1,000 தன்னார்வலர்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் விளக்கப்பட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியாவுடன், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் சிறார் தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான ஏற்பாடுகள், தொற்று பாதிப்பை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் விளக்கப்பட்டது. … Read more

தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்த சசிகலா..!

பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார். பொங்கல் பணிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய ‘பொங்கல் சிறப்பு தொகுப்பு’ வழங்கும் திட்டத்தை ஜனவரி 4 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளார். சென்னை,தலைமைச்செயலகத்தில் இருந்து நாளை மறுதினம் காலை 10.30 மணிக்கு இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.அதன்படி, அனைத்து நியாய விலை கடைகளிலும் நாளை … Read more