புதிய குடியிருப்புகளுக்கான ஆணையை வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

வீடுகளை இழந்த 28 குடும்பங்களில் 17 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்புகளுக்கான ஆணையை வழங்கினார் அமைச்சர்.

சென்னையின் திருவொற்றியூரில் அரிவாகுளத்து பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பு கட்டடம் திடீரென டிச.27-ஆம் தேதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால், அங்கு D பிளாக் குடியிருப்பில் இருந்த 24 வீடுகள் தரைமட்டமாகின.

கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், மக்கள் விபத்துக்கு முன்தினம் இரவே வெளியேறியதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனைத்தொடர்ந்து, இடிந்த குடியிருப்புக்கு பதிலாக மாற்று வீடுகள் விரைவில் வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை, திருவொற்றியூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவத்தில், வீடுகளை இழந்த 28 குடும்பங்களில் 17 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்