#BREAKING: பொங்கல் தொகுப்பு – 12 கூடுதல் பதிவாளர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு!

பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தை கண்காணிக்க கூடுதல் பதிவாளர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு.

2022-ம் ஆண்டு தமிழர் திருநாளான தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பொங்கல் தொகுப்பை 2 கோடியே 15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் வழங்க அரசு உத்தரவிட்டது.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஜனவரி 4 ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 4ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் வினியோகம் செய்யப்பட உள்ள நிலையில், இப்பணிகளை கண்காணிக்க 12 கூடுதல் பதிவாளர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பின் தரம் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தகுதி வாய்ந்த அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்