விஜயகாந்த் உடல்நிலை எப்படி உள்ளது..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்..!

vijayakanth

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த நவம்பர் 18ம் தேதி மார்புச் சளி, இடைவிடாத இருமல் காரணமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக வெளியான தகவல் பொய்யானது, இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. … Read more

வீராங்கனை பிரியா இறப்பதற்கு முன்பு நடந்தவை இதுதான்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.!

வீராங்கனை பிரியா இறப்பதற்கு முன்பு நடந்தவை பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை பிரிவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அதில் பேசிய அமைச்சர், வீராங்கனை பிரியா இறந்த போதும் அதற்க்கு முன்னரும் முன்னெடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார். அவர் கூறுகையில்,  ப்ரியாவின் கால் அகற்றப்பட்டது தெரிந்ததும், நான் அங்கு சென்றுவிட்டேன். எங்கையாவது தவறு நடந்தால் உடனடி நடவடிக்கை … Read more

மழைக்கால முன்னெச்சரிக்கைகள்.! மாணவர்களுக்காக நடமாடும் மருத்துவ வாகனங்கள்.! அமைச்சர் புதிய தகவல்.!

தமிழகத்தில் மழைக்காலத்தில் மக்களை காய்ச்சல் போன்ற நோயில் இருந்து காக்க, எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.   தமிழகத்தில் தற்போது மழைக்காலம் ஆரம்பித்து உள்ளதால் , பொதுமக்கள் சுகாதாரத்தத்திற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதில் இருந்து, தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சுமார் 11 ஆயிரம் மருத்துவமனைகளை தாண்டி, புதியதாக … Read more

இனி அபராதம் இல்லை;செவிலியர்களுக்கு விரைவில் அரசுப் பணி – அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன குட்நியூஸ்!

கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து செவிலியர்களுக்கும் விரைவில் படிப்படியாக அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில்  பணிபுரிய ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர்.பின்னர் அவர்களது பணிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.இதனையடுத்து,தமிழகத்தில் கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களில் 1000 பேருக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ளது.சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து,மீதமுள்ள செவிலியர்கள் தங்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை … Read more

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை – திட்டம் இன்று தொடக்கம்!

உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம்,உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அண்டை நாடுகள் வழியாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.அந்த வகையில்,இதுவரை 17,400 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். எனினும்,உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.அந்த வகையில்,வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்திற்கு ரூ 3.5 கோடி ஒதுக்கீடு செய்து ஏற்கனவே தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. … Read more

#Breaking:நீட் விலக்கு:சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தேதி – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

சென்னை:வருகின்ற பிப்.8 ஆம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழக சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் … Read more

#BREAKING: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியீடு. 2021-2022ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பு தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 6,999 எம்.பி.பி.எஸ், 1,930 பி.டி.எஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் 4,349, தனியார் கல்லூரிகளில் 2,650 என மொத்தம் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. … Read more

சூப்பர்…கொரோனா குறைந்தால் முழு ஊரடங்கு ரத்தா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு!

சென்னை:கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை குறைவதைப் பொறுத்து,வரும் வாரங்களில் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்காது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று 30,744 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை குறைவதைப் பொறுத்து,வரும் வாரங்களில் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்காது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நேதாஜி … Read more

மெகா தடுப்பூசி முகாம்! 14,29,736 பேருக்கு தடுப்பூசி – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் இன்று 19-வது மெகா தடுப்பூசி முகாம் மூலம் 14,29,736 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மாநிலம் முழுவதும் தடுப்பூசியை அதிகரிக்க மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த … Read more

“இவர்கள்தான் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை:தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழக்கின்றனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் 19 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது: “சென்னையில் 1600 இடங்களில் காலை 9 … Read more