#BREAKING: சென்னையில் கொரோனா பாதிப்பு 34 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில்  கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 34,245 -ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 34,245ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.  அதில் 15,257 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,18,565 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் 422 பேர் உயிரிழந்துள்ளனர். 

#BREAKING : வீரமரணமடைந்த தமிழக வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

 வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் நேற்று  இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.இதில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் லடாக் சீன எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ … Read more

வீரமரணமடைந்த தமிழக வீரர் ! முதல்வர்,துணை முதல்வர் இரங்கல்

வீரமரணமடைந்த தமிழக வீரருக்கு முதல்வர்,துணை முதல்வர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.  லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் நேற்று  இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.இதில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்   முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் இதற்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.இது குறித்து தனது ட்விட்டர் … Read more

21 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

 21 மாநில முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலமாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.  கொரோனா பரவல் தொடங்கியதும் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.ஆனாலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதற்குஇடையில் தான் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோனை மேற்கொண்டு கொரோனா நிலவரங்கள் குறித்து அறிந்து வருகிறார். அந்த வகையில் இன்று கேரளா,பஞ்சாப்,கோவா உள்ளிட்ட 21 மாநில முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலமாக பிரதமர் மோடி … Read more

தமிழக வீரர் பழனி வீரமரணம் ! ஸ்டாலின் ,தினகரன் இரங்கல்

லடாக்கில் நடைபெற்ற மோதலில் தமிழக வீரர் பழனி வீரமரணம் அடைந்த நிலையில் ஸ்டாலின் ,தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.இதில் உயிரிழந்த வீரரில் ஒருவர், தமிழகத்தை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர், ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக … Read more

ராணுவ தளபதியின் பதான்கோட் பயணம் ரத்து

ராணுவ தளபதியின் பதான்கோட் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் பகுதியில் நீண்ட நாட்களாக பதற்றம் நீடித்து வரும் நிலையில் லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், நேற்று இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.இதனால் இந்தியா மற்றும் சீனா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே ராணுவ தளபதி நரவனே பதான்கோட் பகுதியில் உள்ள ராணுவ நிலைகளை பார்வையிட இருந்த நிலையில் … Read more

எல்லையில் சீன ராணுவம் தாக்குதல் -அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை

லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 3 பேர் வீர மரணம் அடைந்த நிலையில் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். லடாக் எல்லை பகுதியில் சீனா மற்றும் இந்தியா இடையே எல்லை பிரச்சினை நிலவி வந்த நிலையில் இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.எனவே இரு நாடுகளும் தங்களது படைகளை வெளியேற்றும் போது நேற்று இரவு மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் 3 பேர் வீர மரணம் அடைந்தனர்.  இந்நிலையில் … Read more

ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு 15 நாள்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். தமிழக சபாநாயகர் தனபால் ஏன் முடிவு எடுக்காமல் இருக்கிறார் என  என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.   

#BrekingNews : இந்திய சீன இராணுவங்களுக்கு இடையே மோதல் ! இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு

எல்லையில் அத்துமீறிய சீனப்படைகள் வெளியேறும்போது இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீன இடையே நீண்ட நாட்கள் பதற்றம் நிலவி வருகிறது. எனவே இது தொடர்பாக இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது . இந்நிலையில், லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்தனர். பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ உயர் … Read more

ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து பேசிய கருத்துக்கு அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ஆர்.எஸ்.பாரதி மீது எஸ்.சி, எஸ்.டி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், கடந்த மாதம்  23-ஆம் தேதி ஆர்.எஸ.பாரதியை போலீசார் கைது  செய்தனர். இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் மே 31-ஆம் தேதி வரை … Read more