எல்லையில் சீன ராணுவம் தாக்குதல் -அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை

லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 3 பேர் வீர மரணம் அடைந்த நிலையில் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

லடாக் எல்லை பகுதியில் சீனா மற்றும் இந்தியா இடையே எல்லை பிரச்சினை நிலவி வந்த நிலையில் இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.எனவே இரு நாடுகளும் தங்களது படைகளை வெளியேற்றும் போது நேற்று இரவு மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். 

இந்நிலையில் லடாக் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படைகளின் தளபதிகள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.