ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீதான வழக்கு -இன்று உச்சநீதிமன்றம் விசாரணை

 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில்   விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில்  ஓ.பன்னீர்செல்வம் அணி  சட்டசபையில்  முதலமைச்சர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது.அந்த நேரத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை … Read more

ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீடு -மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

 மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீடு அளிப்பது குறித்து   மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  முதுகலை மருத்துவப் படிப்பிற்கான இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என்றும், மருத்துவப் படிப்பில் குளறுபடிகள் நடப்பதாகவும் சர்ச்சை எழுந்து வருகிறது. எனவே, முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசுக்கு ஆணையிடக் கோரி அதிமுக, திமுக, மதிமுக போன்ற கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுசம்பந்தமாக … Read more

பெட்ரோல் – டீசல் விலை கூடுதல் சுமையை ஏற்படுத்தும் -சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம்

கச்சா எண்ணெய் விலைச்சரிவை ஏழை எளிய மக்களுக்கு பயனுறும் வகையில் பெட்ரோல் டீசல் விலை குறைக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் சோனியா காந்தி. கடந்த 10 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது.சென்னையில் இன்று பெட்ரோல் ரூ.80.37-க்கும் டீசல் ரூ.73.17-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஆனால் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்த கொரோனா காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது.மேலும் பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்க வேண்டு என்று கோரிக்கை விடுக்கப்பட்டு … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணம் – முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

அடையாள அட்டை வைத்துள்ள  மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000 வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வேலை  இன்றி பலர் சிரமப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில்முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பில்,கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு மட்டும் அல்லாமல்,ஏழை ,எளிய மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கியும்,பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை முனைப்புடன் செயல்படுத்தியும் வருகிறது. இதன் காரணமாக ,தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் … Read more

50% இட ஒதுக்கீடு தர கோரிய வழக்கு ! இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை !

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு தர கோரிய வழக்கு இன்று  உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது . முதுகலை மருத்துவப் படிப்பிற்கான இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என்றும், மருத்துவப் படிப்பில் குளறுபடிகள் நடப்பதாகவும் சர்ச்சை எழுந்து வருகிறது. எனவே, முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசுக்கு ஆணையிடக் கோரி அதிமுக, திமுக, மதிமுக போன்ற கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், … Read more

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ! மாநிலங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.

கொரோனா குறித்து  இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் மாநிலங்களுடன்  பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.  கொரோனா பரவல் தொடங்கியதும் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.ஆனாலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதற்குஇடையில் தான் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோனை மேற்கொண்டு கொரோனா நிலவரங்கள் குறித்து அறிந்து வருகிறார். இதுவரை 5 முறை ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தான் மீண்டும் முதலமைச்சர்களுடன் … Read more

#BREAKING: சென்னையில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில்  கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 33,243 -ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 1257 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 33,243 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதில் 15,385 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,17,476 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் 382 பேர் உயிரிழந்துள்ளனர். 

சேப்பாக்கம் – திருவெல்லிகோணி தொகுதி காலியானதாக அறிவிப்பு

சேப்பாக்கம் – திருவெல்லிகோணி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை மேற்கு மாவட்ட திமுகச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வுமான  ஜெ.அன்பழகன் சிறுநீரகம் மற்றும் இதைய பிரச்சனை  காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வந்தனர்.ஆனால்  ஜூன் 10-ஆம் தேதி  ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்நிலையில் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானதை அடுத்து … Read more

#BREAKING நீட் உள் ஒதுக்கீடு – அவசர சட்டம் கொண்டுவர ஒப்புதல்

நீட் உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில்  நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்இடஒதுக்கீடு அளிப்பது குறித்து குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவினர் தயாரித்த அறிக்கை இன்று முதலமைச்சர்  பழனிசாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2 கி.மீ. தொலைவிற்குள் நடந்தே தான் செல்ல வேண்டும் -தமிழக அரசு உத்தரவு

அத்திவாசியப் பொருட்களை வாங்க 2 கி.மீ. தொலைவிற்குள் நடந்தே தான் செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  சென்னை ,செங்கல்பட்டு, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும்  காய்கறி கடைகள் , மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி … Read more