#breaking: இன்று ஒரே நாளில் 15 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 15,659 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 15,659 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை ஆக 10,81,988 அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4,206 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இன்று மேலும் 82 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் உயிரிழப்பு … Read more

#BREAKING: நாளை அனைத்து கட்சி கூட்டம் – முதல்வர் பழனிசாமி அழைப்பு!!

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஆலோசிக்க நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு. சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் நாளை காலை 9.15 மணிக்கு நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்த நிலையில், அது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் … Read more

ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்புவதா? – சிபிஎம்

தமிழக அரசிடம் கேட்காமல் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியது கண்டனத்துக்குரியது என சிபிஎம் தெரிவித்துள்ளது. தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்புவது கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் கூடுதலாக கோரியுள்ள ஆக்சிஜனை உடனே மத்திய அரசு வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், தேசிய கல்விக்கொள்கையை தமிழ் மொழியில் வெளியிடாதது, தமிழ் மக்களை புறக்கணிக்கும் செயலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

#IPL2021: “16 கோடிக்கு கிறிஸ் மோரிஸ் வொர்த் இல்லை”- பீட்டர்சன் ஓபன் டாக்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விளையாடும் தென் ஆப்பிரிக்கா அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், “16 கோடிக்கு தகுதியானவர் இல்லை” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர், கொரோனா பரவலுக்கும் மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிகபட்ச தொகையான ரூ.16 கோடிக்கு ஏலம்போனவர், தென்னாபிரிக்கா அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ்மோரிஸ். இவரின் அடிப்படை விலை ரூ.75 லட்சமாக இருந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. … Read more

#Breaking: தமிழகத்தில் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் முழு பொதுமுடக்கம் கிடையாது!

தமிழகத்தில் ஞாயிற்றுகிழமை தவிர மற்ற நாட்களில் முழு பொதுமுடக்கம் கிடையாது என்றும், இப்போதுள்ள கட்டுப்பாடுகளை தொடர்ந்து, மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாட்டுகளை அறிவித்துள்ளது. ஆயினும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 13,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக இன்று … Read more

#Breaking: புதிய தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு!

தேசிய கல்விக்கொள்கையின் மாநில மொழிபெயர்ப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் அசாமி, கன்னடம், மராத்தி, மலையாளம் உள்ளிட்ட 17 மொழிகள் இடம்பெற்றுள்ள நிலையில், தமிழ் மொழிபெயர்ப்பு இல்லை. புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு, ஜூலை 29-ம் தேதியன்று ஒப்புதல் அளித்தது. இதில் இளங்கலை படிப்பிற்கு மாணவர்கள் சேர வேண்டுமானால் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும், மாநிலங்களில் மூன்று மொழி கொள்கை, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அதில் இடம்பெற்றுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகளும், … Read more

அம்பயரின் முடிவுக்கு கடுப்பான ரோஹித் சர்மா.. மீண்டும் அபராதம் விதிக்க வாய்ப்பு?

ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த போட்டியில் அம்பயரின் தவறான  முடிவால் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடுப்பான. இதனால் அவருக்கு மீண்டும் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. சென்னையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் அடித்தது. 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் … Read more

“நான் அதிகம் மனமுடைந்து போனேன்.. அறைக்கு செல்லமுடியவில்லை” ரஸல் உருக்கம்!

“எனது விக்கெட்டை இழந்ததும், அதிகமாக மனமுடைந்து போனேன், உணர்ச்சிவசப்பட்டேன். இதனால் என்னால் அறைக்குச் செல்ல முடியவில்லை” என்று படியில் அமர்ந்த காரணம் குறித்து ரஸல் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 15-ம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில்நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 220 ரன்கள் எடுத்தனர். அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா அணி, 19.1 ஓவர் முடிவில் தனது அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 202 … Read more

“எட்டாம் ஓவரில் 43/4 என்ற ரன்களில் இருந்து 177/9 வரை எடுத்தது நல்லது”- குமார் சங்கக்கரா!

ராஜஸ்தான் அணி, எட்டாம் ஓவரில் 43/4 என்ற ரன்களில் இருந்து 177/9 ரன்கள் வரை எடுத்தது நல்லது என்று அந்த அணியின் இயக்குனர் சங்கக்கரா தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 16-ம் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, ஒருகட்டத்தில் 140 ரன்களை கடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனைதொடர்ந்து களமிறங்கிய ஆள்-ரவுண்டர்கள் … Read more

#Breaking: ஒரே நாளில் 13 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. 78 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,51,487 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாட்டுகளை அறிவித்துள்ளது. ஆயினும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், இன்று 1,25,593 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் 12 வயதிற்குட்பட்ட … Read more