அம்பயரின் முடிவுக்கு கடுப்பான ரோஹித் சர்மா.. மீண்டும் அபராதம் விதிக்க வாய்ப்பு?

ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த போட்டியில் அம்பயரின் தவறான  முடிவால் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடுப்பான. இதனால் அவருக்கு மீண்டும் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. சென்னையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் அடித்தது. 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, 17.4 ஓவர்கள் முடிவில் 132 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து புள்ளிபட்டியலில் 5-ம் இடத்திற்கு முன்னேறியது.

இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நடுவரின் முடிவால் கட்டுப்படைந்தார். மேலும், அவரை வார்த்தைகளால் திட்டினார். அந்தவகையில், பஞ்சாப் அணியின் வீரர் ஹென்ரிக்ஸ் வீமுதல் ஓவரை வீசினார். அவர் வீசிய 5-வது பந்தை ரோஹித் சர்மா அடிக்க முயன்றார். அந்த பந்து, சிறிதளவு சத்தம் கேட்டு விக்கெட் கீப்பர் கைக்கு சென்றது. இதனால் கீப்பராக இருந்த கே.எல்.ராகுல் அவுட் கேட்க, அம்பையராக இருந்த சம்சுதீன் அவுட் கொடுத்தார்.

இதனால் கடுப்பான ரோஹித் சர்மா, அம்பையரை பார்த்து வார்த்தைகளால் கத்தி, டி.ஆர்.எஸ். முடிவுக்கு சென்றார். இதில் அவர் அவுட் இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்த விடியோக்கள், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  ரோஹித் சர்மா செய்த இந்த காரியம், ஐ.பி.எல். விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே ரோஹித் சர்மா மீது மெதுவான பந்துவீச்சுக்காக ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.